மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 ஜன 2021

ஹாலிவுட்டுக்கு திரும்பிய பிரியங்கா

ஹாலிவுட்டுக்கு திரும்பிய பிரியங்காவெற்றிநடை போடும் தமிழகம்

பிரியங்கா சோப்ரா மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

பாடகர் நிக் ஜோன்ஸை மணம் முடித்தபின் புதிய திரைப்படங்களில் ஒப்பந்தமாகாமலிருந்த பிரியங்கா சோப்ரா ராபார்ட் ரோட்ரிகஸ் இயக்கத்தில் ‘வி கேன் பி ஹீரோஸ்’ என்ற படத்தில் இணைந்துள்ளார். குழந்தைகளுக்கான சூப்பர் ஹீரோ படமாக உருவாகிவரும் இப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.

ஹாலிவுட்டில் சுயாதீனமாக திரைப்படங்கள் இயக்கி கவனம் பெற்றவர் ராபர்ட் ரோட்ரிகஸ். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘அலியா: பேட்டல் ஏஞ்சல்’ திரைப்படம் உலகம் முழுவதும் 400 மில்லியன் அமெரிக்க டாலரை வசூலித்தது. இவர் திரைப்படம் எடுக்கத் தொடங்கிய ஆரம்பகாலத்தில் 8000 டாலர் இருந்தால் படம் இயக்கலாம் என்றிருந்தபோது பணம் இல்லாமல் விபரீத முடிவொன்றை எடுத்தார். புதிய மருந்துகளை உடலில் செலுத்தி சோதித்துப் பார்க்க சம்மதித்தால் பணம் தரப்படும் என்று அறிந்து அந்த சோதனைக்கு தன்னை உட்படுத்தி 7000 டாலர்களைப் பெற்றார். பக்கத்து படுக்கையில் இதே சோதனைக்கு வந்திருந்த ஒருவர் இவரது கதையைக் கேட்டு தன்னுடைய 1000 டாலர்களையும் கொடுக்க, 8000 டாலர்களில் படத்தை தயாரித்து இயக்கினார். குறைந்த நபர்களைக் கொண்டு படங்களை இயக்குவது எப்படி என்பதை அறிய இவரது ‘ரிபல் வித்அவுட் எ க்ரூ’ புத்தகம் முக்கியமானது.

‘வி கேன் பி ஹீரோஸ்’ படத்தை ராபர்ட் ரோட்ரிகஸ் இயக்குவதோடு தன்னுடைய குயிக் ட்ரா புரொடக்‌ஷன்ஸ் மூலம் தயாரிக்கிறார். படம் குறித்த செய்தி வெளியானதும் நெட்பிளிக்ஸ் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் முழு விவரத்தையும் நேற்று வெளியிட்டுள்ளது.

கிறிஸ்டியன் சால்டர், யா யா கோஸ்லின், அகிரா அக்பர், அண்ட்ரூ டயாஸ் உள்ளிட்ட பல ஹாலிவுட் கலைஞர்கள் இணைந்துள்ளனர்.

திருமணத்திற்கு முன்பாகவே அவர் ஒப்பந்தமாகி நடித்துவந்த இஸ்நாட் இட் ரொமான்டிக் திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. தி ஸ்கை இஸ் பிங்க் என்ற பாலிவுட் திரைப்படம் டொரண்டோ சர்வதேச திரைப்படவிழாவில் செப்டம்பர் மாதம் திரையிடப்படுகிறது. அக்டோபரில் திரையங்குகளில் வெளியாகவுள்ளது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!


ப.சிதம்பரத்தின் நேற்றைய இரவு!


சிதம்பரத்தின் கைது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?


சிதம்பரத்துக்காகக் காத்திருக்கும் ரோஸ் அவென்யூ நீதிமன்றம்: இங்கேயும் ஓ.பி.சைனி


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


வியாழன், 22 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon