மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 ஜன 2021

டெட்: எழுதியவர்கள் 3 லட்சம்- தேர்ச்சி 324

டெட்: எழுதியவர்கள் 3 லட்சம்- தேர்ச்சி 324வெற்றிநடை போடும் தமிழகம்

ஆசிரியர் தகுதித் தேர்வான டெட் தேர்வின் முதல் தாளில் தேர்ச்சி விகிதம் குறைந்த நிலையில் இரண்டாம் தாளிலும் 1 சதவிகிதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி அடைந்துள்ளது தெரியவந்துள்ளது.

பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வைக் கட்டாயம் எழுத வேண்டும் என்ற விதிமுறையைத் தமிழக அரசு 2011ஆம் ஆண்டு அமலுக்குக் கொண்டு வந்தது. இந்த ஆண்டு டெட் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி இடைநிலை ஆசிரியர் பணிக்கான, ஆசிரியர் தகுதித் தேர்வு, முதல் தாள் கடந்த ஜூன் மாதம் 8ஆம் தேதியும், 6 முதல் 8ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் ஜூன் 9ஆம் தேதியும் நடைபெற்றது. முதல் தாள் தேர்வை 1,62,313 பேர் எழுதினர். இதில் ஒரு சதவிகிதத்தினர் கூட தேர்ச்சி பெறவில்லை. 482பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

இது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இரண்டாம் தாளுக்கான தேர்வு முடிவு நேற்று இரவு வெளியானது. இந்த தேர்வு முடிவும் தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தேர்வு எழுதிய 3,79,733 பேரில் 324 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 150 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற தேர்வில் 82க்கும் மேல் 300 பேரும், 90க்கும் மேல் 24 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வின் போது ஓஎம்ஆர் ஷீட்டில், ஷேட் செய்ததில் பெரும்பாலான தேர்வர்கள் தவறு செய்திருந்ததாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கும் நிலையில், வினாத் தாள் கடினமாக இருந்ததாகத் தேர்வர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் பாடத் திட்டங்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில் அதற்கேற்ற வகையில் வினாத் தாள் தயாரிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!


சிதம்பரத்தின் கைது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?


சிதம்பரத்துக்காகக் காத்திருக்கும் ரோஸ் அவென்யூ நீதிமன்றம்: இங்கேயும் ஓ.பி.சைனி


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


சிதம்பரத்துக்கு வெளிநாட்டு தூதரகம் அடைக்கலம்?


வியாழன், 22 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon