மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 ஜன 2021

விருப்பப்பட்டு உறவுகொண்டால் ‘ரேப்’ ஆகாது!

விருப்பப்பட்டு உறவுகொண்டால் ‘ரேப்’ ஆகாது!வெற்றிநடை போடும் தமிழகம்

திருமணமாகாத நிலையில் ஆண், பெண்ணுடன் விருப்பப்பட்டு உறவு வைத்துக்கொள்வதை பாலியல் வன்புணர்வாக எடுத்துக்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

விற்பனை வரித்துறையின் உதவி ஆணையராக உள்ள பெண்மணி, சிஆர்பிஎஃப் அதிகாரி ஒருவர் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் டி.ஒய். சந்திராசூட், இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

பெண் உதவி ஆணையரும், சிஆர்பிஎஃப் அதிகாரியும் ஆறு ஆண்டுகளாக நெருங்கி பழகிவந்துள்ளனர். இருவரது வீடுகளிலும் பல்வேறு தருணங்களில் சேர்ந்து இருந்துள்ளனர். தற்போது சிஆர்பிஎஃப் அதிகாரிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதால் பாலியல் வன்புணர்வு வழக்கு தொடர்ந்துள்ளார்.

எனவே, சிஆர்பிஎஃப் அதிகாரி மீது பாலியல் வன்புணர்வு புகாரின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாதிடப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதிகள், திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு அதனை மீறுவதை தவறான வாக்குறுதியளித்து விட்டு ஏமாற்றியதாக எடுத்துக் கொள்ள முடியாது என குறிப்பிட்டனர்.

மேலும், திருமணம் நிச்சயிக்கப்படும் முன்பாக விருப்பப்பட்டு உறவு கொள்வதை பாலியல் குற்றச்சாட்டாக கருத முடியாது என தீர்ப்பளித்துள்ளனர்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!


சிதம்பரத்தின் கைது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?


சிதம்பரத்துக்காகக் காத்திருக்கும் ரோஸ் அவென்யூ நீதிமன்றம்: இங்கேயும் ஓ.பி.சைனி


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


சிதம்பரத்துக்கு வெளிநாட்டு தூதரகம் அடைக்கலம்?


வியாழன், 22 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon