மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 ஜன 2021

காஷ்மீர்: திமுக தலைமையில் போராட்டம்!

காஷ்மீர்: திமுக தலைமையில் போராட்டம்!வெற்றிநடை போடும் தமிழகம்

ஜம்மு காஷ்மீர் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை விடுவிக்கக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று (ஆகஸ்ட் 22) காலை திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஷ்மீர் இரண்டாகப் பிரிப்பு மற்றும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370, 35ஏவை நீக்கும் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து அதனைக் கடந்த 6ஆம் தேதி நிறைவேற்றியது மத்திய அரசு. இதற்காக முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட காஷ்மீரின் முக்கிய தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். காஷ்மீர் முழுவதும் தொலைத் தொடர்பு சேவையும் துண்டிக்கப்பட்டது.

இந்தநிலையில் காஷ்மீருக்கு எதிரான மத்திய அரசு நடவடிக்கைகளைக் கண்டித்தும், காஷ்மீர் தலைவர்களை விடுவிக்கக் கோரியும், தொலைத்தொடர்பு சேவையைச் சீர் செய்ய வலியுறுத்தியும் திமுக தலைமையில் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 22) காலை டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடங்கியது. இதில் 14 எதிர்க்கட்சிகள் கலந்துகொண்டுள்ளனர். திமுக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் பலர் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத், கார்த்தி சிதம்பரம் எம்.பி.யும் போராட்டத்தில் பங்கேற்றனர். திமுக எம்.பிக்கள் திருச்சி சிவா, தயாநிதி மாறன், ஆ.ராசா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அப்போது காஷ்மீரில் நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகளை, தளர்த்த வேண்டும். மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினர். திமுக எம்.பி., டி.ஆர் பாலு பேசுகையில், 14 நாட்களாக வீட்டு காவலில் இருக்கும் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்றார். இந்த போராட்டத்தில் திமுக கூட்டணியில் இருக்கும் விசிக கலந்துகொள்ளவில்லை.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!


சிதம்பரத்தின் கைது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?


சிதம்பரத்துக்காகக் காத்திருக்கும் ரோஸ் அவென்யூ நீதிமன்றம்: இங்கேயும் ஓ.பி.சைனி


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


சிதம்பரத்துக்கு வெளிநாட்டு தூதரகம் அடைக்கலம்?


வியாழன், 22 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon