மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 ஜன 2021

நளினிக்கு பரோல் நீட்டிப்பு!

நளினிக்கு பரோல் நீட்டிப்பு!வெற்றிநடை போடும் தமிழகம்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பரோலில் வெளியே வந்திருக்கும் நளினிக்கு மேலும் 3 வாரங்கள் பரோலை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 22) உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி, மகள் திருமணத்துக்காக பரோலில் வெளியே வந்துள்ளார். திருமண ஏற்பாடுகள் முடியாததால் பரோலை நீட்டிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது ஆகஸ்ட் 22ஆம் தேதி பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும் ,சிறைத் துறைக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, இன்று விசாரணை நடைபெற்ற நிலையில், நளினிக்கு மேலும் 3 வார காலம் பரோல் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் 25 முதல் மேலும் 3 வாரங்களுக்கு பரோல் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!


சிதம்பரத்தின் கைது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?


சிதம்பரத்துக்காகக் காத்திருக்கும் ரோஸ் அவென்யூ நீதிமன்றம்: இங்கேயும் ஓ.பி.சைனி


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


சிதம்பரத்துக்கு வெளிநாட்டு தூதரகம் அடைக்கலம்?


வியாழன், 22 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon