மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 18 ஜன 2021

ப.சிதம்பரத்தின் நேற்றைய இரவு!

ப.சிதம்பரத்தின் நேற்றைய இரவு!

ஆகஸ்டு 21 ஆம் தேதி இரவு டெல்லி ஜோர் பாக்கில் உள்ள ப.சிதம்பரம் வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டு சிபிஐயின் காரில் ஏற்றப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் லோதி சாலையில் இருக்கும் சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

முதலில் ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் சிபிஐ அதிகாரிகள் எதையுமே மூடுமந்திரமாக வைத்திருந்தனர். இரவு பத்து மணியளவில் அவர் சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கே சென்றதும் நாற்காலியில் அமர வைக்கப்பட்ட ப.சிதம்பரத்தை சில நிமிடங்களில் ராம் மனோகர் லோகியா மருத்துவர்கள் குழு ஒன்று சோதனை செய்தது. சிதம்பரத்துக்கு இப்போது 73வயதாகிறது. மருத்துவர்கள் முதலில் ரத்த அழுத்த சோதனை செய்தனர். பின் சார் சுகர் இருக்கா என்று கேட்டனர். இல்லை என்று பதிலளித்தார் சிதம்பரம்.

சிபிஐ தலைமை அலுவலகத்தின் தரைத் தளத்தில் உள்ள சிபிஐ கெஸ்ட் அவுஸில் 5 ஆம் எண் கொண்ட சூட் அறையில் தங்க வைக்கப்பட்டார் சிதம்பரம். ‘இரவு உணவு என்ன வேண்டும்?’ என்று அதிகாரிகள் சிதம்பரத்திடம் கேட்க, ஒரு டீ போதும் என்று சொல்லியிருக்கிறார் சிதம்பரம். அதன்படி சிதம்பரத்துக்கு டீ வருவிக்கப்பட்டது.

அதற்குள் ஐ.என்.எக்ஸ்.வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் அங்கே வந்தனர். சிபிஐ உயரதிகாரிகளும் தலைமை அலுவலகத்துக்கு விரைந்தனர். ‘நான் சட்டத்தை மதிக்கிறேன். நீங்களும் சட்டத்தை மதிப்பீங்கனு நம்பினேன்’ என்று சிபிஐ அதிகாரிகளைப் பார்த்து புன்னகைத்தார் சிதம்பரம். அதற்கு அவர்கள் பதிலேதும் சொல்லவில்லை.

சில நிமிடங்களில், ‘என்னை எப்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் போகிறீர்கள்?’ என்று கேட்டார் சிதம்பரம். அப்போதுதான் ஐ.என்.எக்ஸ் வழக்கு விசாரணை அதிகாரிகள் சிலர் பல ஆவணங்களோடு அவர் முன்னே வந்து அமர்ந்தனர். ‘சார் நாளைக்குதான் உங்களை ஆஜர்படுத்த சொல்லியிருக்கிறார்கள்’ என்றபடியே சில கேள்விகளை அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள்” என்று தெரிவித்தனர் சிபிஐ வட்டாரத்தில்.

ப.சிதம்பரத்திடம் சில மணி நேரங்கள் விசாரணை நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இன்று நீதிமன்றத்தில் சிதம்பரம் ஆஜர்படுத்தப்படும்போது வேறு பல விவரங்களும் வெளிவரலாம்.

சுவரேறிக் குதித்த சிபிஐ: சிதம்பரம் கைதுமேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


சிதம்பரத்துக்கு வெளிநாட்டு தூதரகம் அடைக்கலம்?


‘தினகரன் உத்தரவை மீறினாரா பழனியப்பன்?


கர்நாடகாவைத் தொடர்ந்து புதுவை: ஆட்சி மாற்றம்?


வியாழன், 22 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon