மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 ஜன 2021

கிச்சன் கீர்த்தனா: இஞ்சி - துளசி டீ

கிச்சன் கீர்த்தனா: இஞ்சி - துளசி டீவெற்றிநடை போடும் தமிழகம்

மழைக்காலங்களில் குளிர்ச்சியான பருவநிலையில் மின்விசிறியின் கீழே படுத்துத் தூங்குவது, ஜில்லென்று ஏ.சி-யை ஆன் பண்ணி உறங்குவது, குளிர்ந்த நீரில் முகம் கழுவுவது போன்றவற்றைச் செய்தால் தும்மல், மூக்கடைப்பு, தலைபாரம், தலைவலி, சளித்தொல்லை எனப் பிரச்சினைகள் வரிசைகட்டி நிற்கும். இது சைனஸ், ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்களை வெகுவாக பாதிக்கும். அதோடு, சுற்றுச்சூழல் மாசுபடுவதாலும் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படும். அப்படிப்பட்டச் சூழலில் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ வேண்டும். சூடான பானங்களையே அருந்த வேண்டும். காபி, டீ அருந்துவதற்குப் பதில் இஞ்சிச் சாற்றுடன் தேன் கலந்து குடிக்கலாம். தேயிலையுடன் இஞ்சி, துளசி சேர்த்து இந்த டீயை அருந்தலாம்.

என்ன தேவை?

டீத்தூள் - 4 டீஸ்பூன்

தண்ணீர் - 4 கப் (அ) 5 கப்

எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்

கறுப்பு உப்பு - தேவைக்கேற்ப (டிபார்ட்மென்டல் கடைகளில் கிடைக்கும்)

தேன் - 6 (அ) 8 டீஸ்பூன்

இஞ்சிச் சாறு - சிறிதளவு

துளசி - 5 இலைகள்

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் அல்லது டீ குக்கரில் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு கொதிக்கும்போது டீத்தூள், இஞ்சிச் சாறு, துளசியைச் சேர்க்கவும். உடனே ஒரு நிமிடம் மூடி வைக்கவும். பின் ஒரு பெரிய கப்பில் தேன் தேவைக்கேற்ப சேர்த்து டீயை வடிகட்டி கலக்கி கறுப்பு உப்பு ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்து பரிமாறவும். பால் இல்லாத இந்த டீ சுவையாக இருக்கும். சூடாகவோ, ஜில்லென்றோ பருகலாம்.

நேற்றைய ரெசிப்பி: மணத்தக்காளிக்கீரை சூப்


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


சிதம்பரத்துக்கு வெளிநாட்டு தூதரகம் அடைக்கலம்?


‘தினகரன் உத்தரவை மீறினாரா பழனியப்பன்?


கர்நாடகாவைத் தொடர்ந்து புதுவை: ஆட்சி மாற்றம்?


வியாழன், 22 ஆக 2019

chevronLeft iconமுந்தையது