மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 ஜன 2021

செப்டம்பரில் வருகிறான் ‘மகாமுனி’!

செப்டம்பரில் வருகிறான் ‘மகாமுனி’!வெற்றிநடை போடும் தமிழகம்

சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா நடிப்பில் உருவாகியுள்ள மகாமுனி செப்டம்பர் 6ஆம் தேதி திரைக்குவர இருக்கிறது.

2011ஆம் ஆண்டு வெளியான மெளனகுரு திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் சாந்தகுமார். எட்டு வருட இடைவெளிக்குப் பின் ஆர்யாவின் நடிப்பில் தற்போது இவரது இரண்டாவது படமாக மகாமுனி படத்தை இயக்கியிருக்கிறார். இந்துஜா, மஹிமா நம்பியார் நாயகிகளாகவும் மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் காளி வெங்கட், அருள் தாஸ், ஜெயப்பிரகாஷ் நடித்திருக்கின்றனர்.

ஆன்மிகம், அரசியல், மனித இருப்பு எனத் தீவிரமான விஷயங்களை இந்தப் படம் உள்ளடக்கி இருப்பதாகப் படம் குறித்து சாந்தகுமார் முன்னரே தெரிவித்திருந்தார். த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படம் ஆர்யாவிற்கு ‘கம்பேக் மூவியாக’ அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர் சிறப்பாக வந்துள்ள நிலையில், படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜூலை மாதமே மகாமுனி படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தள்ளிப்போனது.

இந்த நிலையில், செப்டம்பர் 6ஆம் தேதி மகாமுனி வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. செப்டம்பர் 20ஆம் தேதி ஆர்யா, சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ள காப்பான் படமும் வெளியாகவுள்ளதால் செப்டம்பர் மாதம் ஆர்யாவுக்கு ஏற்றமளிக்கும் எனக் கூறப்படுகிறது.

மகாமுனி படத்துக்கு தமன் இசையமைக்க, அனைத்து பாடல்களையும் விவேகா எழுதியுள்ளார். ஸ்டூடியோ கிரீன் கே.இ.ஞானவேல்ராஜா படத்தைத் தயாரித்துள்ளார். இதன் தமிழ்நாடு திரையரங்க உரிமையை தருண் பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


சிதம்பரத்துக்கு வெளிநாட்டு தூதரகம் அடைக்கலம்?


‘தினகரன் உத்தரவை மீறினாரா பழனியப்பன்?


கர்நாடகாவைத் தொடர்ந்து புதுவை: ஆட்சி மாற்றம்?


வியாழன், 22 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon