மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 ஜன 2021

சிதம்பரம் திறந்துவைத்த அலுவலகத்தில் சிதம்பரம்

சிதம்பரம் திறந்துவைத்த அலுவலகத்தில் சிதம்பரம்வெற்றிநடை போடும் தமிழகம்

சிதம்பரம் திறந்துவைத்த சிபிஐ தலைமை அலுவலகத்திலேயே அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை நேற்றிரவு (ஆகஸ்ட் 21) டெல்லியிலுள்ள அவரது வீட்டு சுவரேறிக் குதித்து அதிரடியாகக் கைது செய்தனர் சிபிஐ அதிகாரிகள். இதைத் தொடர்ந்து அவரை காரில் அழைத்துக்கொண்டு, லோதி சாலையிலுள்ள சிபிஐ தலைமை அலுவலகத்துக்குச் சென்றனர்.

தான் திறந்துவைத்த அலுவலகத்தில் தானே கைது செய்யப்பட்டு அழைத்து வரப்படுவோம் என்று ப.சிதம்பரம் ஒருகாலமும் நினைத்திருக்க மாட்டார். ஆம், தற்போது சிதம்பரம் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் சிபிஐ தலைமை அலுவலகக் கட்டடம் அவர் திறந்துவைத்தது. 2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமை தாங்க, சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி முன்னிலை வகிக்க தனது நிர்வாகத்தின் கீழ் வரக்கூடிய சிபிஐயின் தலைமை அலுவலகத்தை உள் துறை அமைச்சரான ப.சிதம்பரம்தான் திறந்துவைத்தார்.

அதேபோல 2010ஆம் ஆண்டு சொராபுதீன் போலி என்கவுன்டர் விவகாரத்தில் அப்போதைய குஜராத் மாநில அமைச்சர் அமித் ஷா கைது செய்யப்பட்டபோது உள் துறை அமைச்சராக இருந்தவர் சிதம்பரம். வரலாறு திரும்பும் வகையில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட இந்த நாளில் உள் துறை அமைச்சராக இருப்பவர் அமித் ஷா.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


சிதம்பரத்துக்கு வெளிநாட்டு தூதரகம் அடைக்கலம்?


‘தினகரன் உத்தரவை மீறினாரா பழனியப்பன்?


கர்நாடகாவைத் தொடர்ந்து புதுவை: ஆட்சி மாற்றம்?


வியாழன், 22 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon