மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 ஜன 2021

சிதம்பரம் கைது: மாவட்டத் தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம்!

சிதம்பரம் கைது: மாவட்டத் தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம்!வெற்றிநடை போடும் தமிழகம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதை கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் தமிழகத் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று (ஆகஸ்ட் 21) பரபரப்பான முறையில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தமிழகத் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் கே.எஸ்.அழகிரி.

“மத்திய பாஜக அரசு, தமது கைப்பாவையாக உள்ள மத்திய புலனாய்வுத் துறையை ஏவிவிட்டு பழிவாங்கும் நோக்கத்தோடு திரு ப.சிதம்பரம் அவர்களைக் கைது செய்துள்ளது.

இந்த ஜனநாயக விரோதச்செயலை கண்டித்து அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இன்று (22.8.2019) கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தும்படி மாவட்ட காங்கிரஸ் கட்சியினரைக் கேட்டுக்கொள்கிறேன்.

இன்று (22.8.2019) காலை 10 மணிக்கு சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் இருந்து ஊர்வலமாகச் சென்று சென்னை அண்ணாசாலையில் நடைபெறும்.”

இவ்வாறு கே.எஸ்.அழகிரி அறிக்கையில் கூறியுள்ளார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


சிதம்பரத்துக்கு வெளிநாட்டு தூதரகம் அடைக்கலம்?


‘தினகரன் உத்தரவை மீறினாரா பழனியப்பன்?


கர்நாடகாவைத் தொடர்ந்து புதுவை: ஆட்சி மாற்றம்?


வியாழன், 22 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon