மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஏப் 2020

பிரியங்கா சோப்ரா மீது ஐ.நாவில் பாகிஸ்தான் புகார்!

பிரியங்கா சோப்ரா மீது ஐ.நாவில் பாகிஸ்தான் புகார்!

ஐ.நாவில் நல்லெண்ணத் தூதராக உள்ள பிரியங்கா சோப்ராவை நீக்குமாறு பாகிஸ்தான் கூறியுள்ளது.

விஜய் நடித்த தமிழன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா, பாலிவுட் ஹாலிவுட் என அடுத்தடுத்து தேசம், சர்வதேசம் என எல்லைகளை கடந்து பிரபல நடிகையாக மாறியவர். ஐ.நா.வின் நல்லெண்ண தூதராக கடந்த 2016-ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார் பிரியங்கா.

இந்நிலையில், நல்லெண்ணத் தூதர் பதவியிலிருந்து பிரிங்கா சோப்ராவை நீக்க வலியுறுத்தி ஐ.நா சபை தலைமைக்கு பாகிஸ்தானின் மனித உரிமை விவகாரங்களுக்கான அமைச்சர் ஸ்ரீரின் எம். மசாரி கடிதம் எழுதியுள்ளார். சமீபத்தில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை நீக்கியதற்கு பிரியங்கா சோப்ரா தனது டிவிட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்திருந்தார். பிரியங்காவின் இந்தக் கருத்துக்கு, பாகிஸ்தான் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

நடுநிலை தவறிய கருத்தின் மூலம் பிரியங்கா சோப்ரா நல்லெண்ணத் தூதர் பதவிக்கான மாண்பை இழந்து விட்டதாக அக்கடிதத்தில் மசாரி குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானின் பாலாகோட் பயங்கரவாதிகள் முகாமை இந்திய போர் விமானங்கள் தாக்கி அழித்ததை வாழ்த்தி பிரியங்கா தனது டிவிட்டர் பக்கத்தில் அச்சமயம் கருத்து பதிவிட்டிருந்தார். இதற்கு பாகிஸ்தான் தரப்பில் கடும் விமர்சனங்களை ஏற்கனவே பிரியங்கா பெற்றிருந்த நிலையில், தற்போது காஷ்மீர் விவகாரத்தில் அவரது கருத்து மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இம்மாத தொடக்கத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரியங்கா கலந்து கொண்டுள்ளார். அப்போது ‘பாகிஸ்தானுக்கு எதிரான அணுசக்தி போரை ஊக்குவித்ததற்காக போலித்தனமான நபர்’ என பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கப் பெண் அப்போது பேசியது வைரலாகி சமூக வலைதளங்களில் பரவியது.


மேலும் படிக்க


சிதம்பரத்துக்கு வெளிநாட்டு தூதரகம் அடைக்கலம்?


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


‘தினகரன் உத்தரவை மீறினாரா பழனியப்பன்?


டிஜிட்டல் திண்ணை: கதறி அழுத தீபா- எடப்பாடிக்கு லண்டனில் சிகிச்சை!


கர்நாடகாவைத் தொடர்ந்து புதுவை: ஆட்சி மாற்றம்?


புதன், 21 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon