மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 28 மா 2020

தமிழர்கள் ஏவிய ‘மிஷன் மங்கள்’!

தமிழர்கள் ஏவிய ‘மிஷன் மங்கள்’!

அக்‌ஷய் குமார் நடிப்பில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான இந்திப் படம் மிஷன் மங்கள். ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ள இந்தப் படத்தின் உருவாக்கத்தில் தமிழர்களின் பங்கு அதிகம் இடம்பெற்றுள்ளது.

மிஷன் மங்கள் என்பது செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக இந்தியா அனுப்பிய முதல் செவ்வாய் ஆர்பிட்டர் மிஷன். அதனுடைய முதல் முயற்சியிலேயே வெற்றியைப் பெற்றது. அதை அடிப்படையாகக்கொண்டு தயாரான படம்தான் மிஷன் மங்கள்.

அக்‌ஷய் குமார், வித்யா பாலன், நித்யா மேனன், சோனாக்‌ஷி சின்ஹா, டாப்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இயக்குநர் ஜெகன் வேலூர்க்காரர், ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் தஞ்சைக்காரர், பால்கி மதுரைக்காரர். படத்தில் பணியாற்றியுள்ள மூன்று முக்கிய தொழில்நுட்பக் கலைஞர்களும் தமிழர்கள்.

மங்கள்யானின் உருவாக்கத்திலும் மயில்சாமி அண்ணாதுரை, சுஜாதா உள்ளிட்ட சில தமிழர்கள் பணியாற்றியுள்ளனர். இதனால் படத்தில் ஒரு காட்சியில், தம்பி டீ கொடு என்கிறார் அக்‌ஷய்குமார். அதோடு விண்ணுலகுக்கு போன் செய்து அப்துல்கலாமோடு தமிழில் உரையாடுகிறார்.

ராக்கெட் விடுவது பற்றி எதுவுமே தெரியாத பாமரன் பார்த்தால்கூட அழகாகப் புரியும்படி நல்ல திரைக்கதை. ஒவ்வொரு காட்சியும் கண்களில் ஒற்றிக்கொள்ளும்படி அமைந்திருக்கும் ஒளிப்பதிவு, அதுவும் ராக்கெட் மேலே கிளம்பும் நேரம் இதயத்துடிப்பை எகிற வைக்கின்றன காட்சிகள்.

இந்தப் படம் அக்‌ஷய் குமார் நடித்து இதுவரை வெளிவந்த படங்களில் அதிக ஓப்பனிங்கைப் பெற்ற படமாக அமைந்துள்ளது. படம் வெளியான ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று 29 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது .

கடந்த நான்கு நாட்களில் மட்டும் 97 கோடி ரூபாயை வசூலித்து கடந்த வருடம், 2.0 படம் இந்தி பதிப்பில் வசூலித்த 95 கோடி ரூபாய் சாதனையை முறியடித்துள்ளது.

தமிழகத்தில் குறைவான திரைகளில் இந்தப் படம் வெளியாகியிருந்தாலும் வடஇந்தியாவில் அதிகமான திரைகளில் திரையிடப்பட்டு வசூலைக் குவித்துவருவது தமிழகத்தைச் சேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் மீதான மரியாதை இந்தித் திரையுலகில் அதிகரித்து வருவதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


டிஜிட்டல் திண்ணை: கதறி அழுத தீபா- எடப்பாடிக்கு லண்டனில் சிகிச்சை!


புதிய நாடாளுமன்றக் கட்டடம்: பிரதமர் மோடி


முப்படைகளுக்கும் ஒரே தலைவர்: அன்றே எச்சரித்த காமராஜர்


‘தினகரன் உத்தரவை மீறினாரா பழனியப்பன்?


புதன், 21 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon