மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஏப் 2020

நகை திருடும் பெண் கும்பல் கைது!

நகை திருடும் பெண் கும்பல் கைது!

நகைக் கடைகளில், தங்க நகைகளுக்குப் பதிலாக கவரிங் நகைகளை வைத்து நூதனமாகத் திருட்டு செயலில் ஈடுபட்ட இரு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தேவநாதன் அதே பகுதியில் நகைக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்த நகைக் கடைக்கு வந்த இரு பெண்கள் நகை வாங்குவது போல் கடை ஊழியர்களிடம் நகை மாடல்களை காட்டச் சொல்லியிருக்கின்றனர். ஒருபக்கம் கடை ஊழியர்கள் நகையை காட்டிக் கொண்டிருக்க மறுபக்கம் கடையில் இருக்கும் தங்க நகைகளை எடுத்துக் கொண்டு, தங்களிடம் இருக்கும் கவரிங் நகைகளை வைத்து நூதன திருட்டில் ஈடுபட்டிருக்கின்றனர். இது பற்றி தேவநாதன் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இரண்டு தனிப்படை கொண்ட போலீசார் திருடுபோன நகைக் கடையில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். இதன் அடிப்படையில் செல்வி மற்றும் ரத்னா ஆகிய இரு பெண்களை போலீசார் கைது செய்திருக்கின்றனர். அவர்களிடம் இருந்து தேவநாதன் கடையில் திருடப்பட்ட நான்கரை பவுன் நகை உட்பட 3 லட்ச ரூபாய்க்கும் மேற்பட்ட தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் தமிழகம் முழுவதும் பல இடங்களில் கை வரிசை காட்டியது தெரியவந்துள்ளது. குறிப்பாக திருக்கோவிலூரிலிருந்து நேற்று பண்ருட்டிக்கு வந்த தனியார் பேருந்தில் ஜீவக்கொடி என்பவரிடம் 3 சவரன் நகையைத் திருடியுள்ளனர். இதுகுறித்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தியதில் ஜீவக்கொடியிடம் நகையைக் கொள்ளை அடித்தது செல்வி மற்றும் ரத்னா என்பது தெரியவந்துள்ளது. திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த இவர்கள் சேலம், தருமபுரி பேருந்து நிலையங்களிலும் பெண்களிடம் கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது. தற்போது இருவரும் கடலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.


மேலும் படிக்க


சிதம்பரத்துக்கு வெளிநாட்டு தூதரகம் அடைக்கலம்?


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


டிஜிட்டல் திண்ணை: கதறி அழுத தீபா- எடப்பாடிக்கு லண்டனில் சிகிச்சை!


மாணவர்கள் தொடர் தற்கொலை: எஸ்.ஆர்.எம்மில் ரெய்டு!


‘தினகரன் உத்தரவை மீறினாரா பழனியப்பன்?


புதன், 21 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon