மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 28 மா 2020

நிலச்சரிவில் சிக்கிய மஞ்சு வாரியர்

நிலச்சரிவில் சிக்கிய மஞ்சு வாரியர்

மலையாள நடிகை மஞ்சு வாரியர் உள்ளிட்ட படக்குழுவினர் இமாச்சல் பிரதேசத்தில் பெய்துவரும் மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

சனல்குமார் சசிதரன் இயக்கத்தில் மஞ்சு வாரியர் கைட்டம் என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக 30 பேர் அடங்கிய படக்குழு சட்ரு என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது, நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியை விட்டு வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

மஞ்சு வாரியர் தனது சகோதரர் மது வாரியரை சேட்டிலைட் போன் மூலம் திங்கள் இரவு தொடர்பு கொண்டு அங்குள்ள நிலைமை குறித்து கூறியுள்ளார்.மேலும் இணைய சேவை, தொலைத் தொடர்பு வசதிகள் முற்றிலுமாக செயலிழந்து இருப்பதாகவும் தெரிவித்தார். அந்த இடத்தில் 200க்கும் அதிகமானோர் சிக்கியுள்ளதாகவும், ஒரு நாளைக்கு மட்டுமே உணவு இருப்பதாகவும் கூறினார். 15 நொடிகள் மட்டுமே தொடர்ந்த அந்த போன் காலில் அதிக தகவல்களை அவரால் கூறமுடியவில்லை.

மஞ்சு வாரியரின் நிலைமை குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றார் அவருடைய சகோதரர். இதையடுத்து மீட்புப்படையினர் நேற்று (ஆகஸ்ட் 21) படக்குழுவினரை மீட்டு மணாலியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இமாச்சல் பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ ஊடகம் செய்திவெளியிட்டது.

மேலும் ஜெய்ராம் தாகூர் மத்திய அமைச்சர் வி.முரளிதரனுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி மண்டி மாவட்டத்தில் உள்ளவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்


மேலும் படிக்க


சிதம்பரத்துக்கு வெளிநாட்டு தூதரகம் அடைக்கலம்?


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


டிஜிட்டல் திண்ணை: கதறி அழுத தீபா- எடப்பாடிக்கு லண்டனில் சிகிச்சை!


மாணவர்கள் தொடர் தற்கொலை: எஸ்.ஆர்.எம்மில் ரெய்டு!


‘தினகரன் உத்தரவை மீறினாரா பழனியப்பன்?


புதன், 21 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon