மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 மே 2020

வேலைநிறுத்தம்: தண்ணீர் தட்டுப்பாடு!

வேலைநிறுத்தம்: தண்ணீர் தட்டுப்பாடு!

தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

தமிழ்நாட்டில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவிவந்த நிலையில் தற்போது பெய்துவரும் மழை காரணமாக மக்கள் மெல்ல இயல்புநிலைக்கு திரும்பிவருகின்றனர். இந்நிலையில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் செயற்கையான தண்ணீர் தட்டுப்பாடு உருவாகவுள்ளது.

தண்ணீர் தட்டுப்பாடு உச்சத்தில் இருந்தபோது புறநகர்ப் பகுதிகள் மற்றும் நீர் நிலைகளில் தண்ணிர் லாரி உரிமையாளர்கள் தண்ணீர் திருட்டில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. காவல்துறையினர் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவுசெய்தனர். இது தொடர்பாக அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில் பேச்சுவார்த்தை மூலம் தடுத்துநிறுத்தப்பட்டது.

இந்நிலையில் ஆகஸ்ட் 17ஆம் தேதி சென்னை கோவிலம்பாக்கத்தில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நிஜலிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம்” என்று அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தண்ணீர் எடுப்பதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கும் வரை, தங்களது போராட்டத்தை கைவிட முடியாது என்று நிஜலிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்த வேலைநிறுத்தத்தின் காரணமாக அடுக்குமாடி குடியிருப்புகள், மென்பொருள் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவை கடும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.


மேலும் படிக்க


சிதம்பரத்துக்கு வெளிநாட்டு தூதரகம் அடைக்கலம்?


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


டிஜிட்டல் திண்ணை: கதறி அழுத தீபா- எடப்பாடிக்கு லண்டனில் சிகிச்சை!


மாணவர்கள் தொடர் தற்கொலை: எஸ்.ஆர்.எம்மில் ரெய்டு!


‘தினகரன் உத்தரவை மீறினாரா பழனியப்பன்?


புதன், 21 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon