மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 14 ஜூலை 2020

ஃபேஸ்புக் கணக்கு தொடங்க ஆதார் வேண்டுமா?

ஃபேஸ்புக் கணக்கு தொடங்க ஆதார் வேண்டுமா?

பேஸ்புக் கணக்குகள் தொடங்குவதற்கு ஆதார் கார்டு அவசியம் என்று கோரி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உயர் நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற பேஸ்புக் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது. இதை உச்சநீதிமன்றம் நேற்று ஆகஸ்டு 20 ஏற்றுக்கொண்டது.

சமூக வலைதளமான ஃபேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் கணக்குகளை தொடங்க ஆதார் கார்டு அவசியம் என்று உத்தரவிட வேண்டும் எனக் கோரி சென்னை, மும்பை, மத்திய பிரதேச உயர்நீதிமன்றங்களில் வெவ்வேறு நபர்களால் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்நிலையில் ஃபேஸ்புக் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் வெவ்வேறு மாநில உயர்நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்ட வழக்குகள் ஒரே கோரிக்கையையே வலியுறுத்துகிறார்கள். எனவே இதில் சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இம்மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், அதேநேரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்கும் பேஸ்புக் தொடர்பான வழக்கு விசாரணையை நிறுத்திவைக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

தனிநபர் இழைக்கும் குற்றத்திற்காக சமூக வலைதளங்களை குற்றம்சாட்ட முடியுமா என்று கேட்ட உச்சநீதிமன்றம் இவ்வழக்கில் மத்திய அரசு மற்றும் தமிழக அரசு பிற சமூக வலை தளங்கள் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பி வழக்கை செப்டம்பர் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது


மேலும் படிக்க


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


டிஜிட்டல் திண்ணை: கதறி அழுத தீபா- எடப்பாடிக்கு லண்டனில் சிகிச்சை!


புதிய நாடாளுமன்றக் கட்டடம்: பிரதமர் மோடி


முப்படைகளுக்கும் ஒரே தலைவர்: அன்றே எச்சரித்த காமராஜர்


‘தினகரன் உத்தரவை மீறினாரா பழனியப்பன்?


புதன், 21 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon