மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 ஜன 2021

தினகரன் உத்தரவை மீறினாரா பழனியப்பன்?

தினகரன் உத்தரவை மீறினாரா பழனியப்பன்?வெற்றிநடை போடும் தமிழகம்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் உத்தரவை, துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் மீறிவிட்டாரா என்று தர்மபுரி மாவட்ட அமமுகவினரே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அமமுக துணைப் பொதுச்செயலாளரான பழனியப்பன் மகள் திருமணம் செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக திருமண அழைப்பிதழ்கள் முதல் கட்டமாக 25 ஆயிரமும் இரண்டாவது கட்டமாக 25 ஆயிரம் என மொத்தம் 50 ஆயிரம் அழைப்பிதழ்கள் அடித்து வழங்கிவருகிறார் பழனியப்பன். திருமணத்தை மிக பிரம்மாண்டமாக தினகரன் தலைமையில் நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார். சில நாட்களுக்கு முன்புதான் பெங்களூரு சிறைக்கு தினகரனோடு சென்று சசிகலாவுக்கும் பத்திரிகை வைத்துவிட்டு வந்தார் பழனியப்பன்.

இதற்கிடையில் சென்னை வானரத்தில் நடைபெற்ற கட்சிக்கூட்டத்தில் பேசிய தினகரன், “ திமுக நமது எதிரி, அதிமுக நமது துரோகி. இருவரிடமும் உறவுகள் வைத்துக்கொள்ளக்கூடாது, அவர்கள் குடும்ப நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளக்கூடாது, நாமும் அவர்களை அழைக்கக்கூடாது” என்று பேசினார். அப்போதே, ‘இது பழனியப்பனை மனதில் வைத்துக் கொண்டு தினகரன் போட்ட உத்தரவு. அவர்தான் தன் வீட்டுத் திருமணத்துக்கு அதிமுகவினரை அழைக்கத் திட்டமிட்டு வருகிறார்’ என்று மாவட்டத்தில் நிலவிய விவாதத்தை மின்னம்பலம்.காம் தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிகையில் வெளியிட்டிருந்தோம்.

ஆனால், அதிமுக, திமுக முக்கியப் பிரமுகர்களுக்குப் பத்திரிகைக் கொடுக்க யோசித்துவந்த பழனியப்பனை அவர்களே தொடர்புகொண்டும் நேரடியாகவும் சந்தித்து அழைப்புகளைப் பெற்றிருக்கிறார்கள். இதையடுத்து தவிர்க்க முடியாமல்

அதிமுக, திமுகவைச் சேர்ந்த மற்ற நிர்வாகிகளுக்கும் எம்.எல்.ஏ, எம்.பி.க்களுக்கும் அழைப்புக்களைக் கொடுத்துவரும் பழனியப்பன், அதிமுக ஒன்றிய, நகர நிர்வாகிகளுக்கும் மகள் திருமண அழைப்பிதழைக் கொடுத்துவருகிறார். இதையறிந்த அமமுக பிரமுகர்கள் அண்ணனே தினகரன் உத்தரவை மீறிவிட்டார் என்று பேசத்துவங்கிவிட்டார்கள்.

பழனியப்பன் வட்டாரத்தில் பேசியபோது, “பெத்த பொண்ணு கல்யாணம், கிரேண்டா பண்ணனும்னு ஆசைப்படுறாரு. அமைச்சரா இருந்தப்ப எல்லா கட்சியினருக்கும் பொதுவான நபராதான் பழனியப்பன் இருந்தாரு. அந்த நல்ல பேரை தக்க வச்சுக்கத்தான் இப்ப எல்லாருக்கும் பத்திரிகை கொடுக்குறார். இதைத் தெரிஞ்சு பாஜக பிரமுகர்களும் பழனியப்பன்கிட்ட பேசிக்கிட்டிருக்காங்க. இது எங்க போய் முடியுமோ?” என்று இழுக்கிறார்கள்.


மேலும் படிக்க


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


டிஜிட்டல் திண்ணை: கதறி அழுத தீபா- எடப்பாடிக்கு லண்டனில் சிகிச்சை!


புதிய நாடாளுமன்றக் கட்டடம்: பிரதமர் மோடி


முப்படைகளுக்கும் ஒரே தலைவர்: அன்றே எச்சரித்த காமராஜர்


‘சென்னை யூனியன் பிரதேசமாகலாம்: சீமான்


செவ்வாய், 20 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon