மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 7 ஆக 2020

செல்லூர் பாய் அந்த பக்கம் போகாதீங்க: அப்டேட் குமாரு

செல்லூர் பாய் அந்த பக்கம் போகாதீங்க: அப்டேட் குமாரு

ஏன்னே நம்ம தீபா அம்மா தன்னோட அமைப்பை அதிமுகவுல இணைச்சுட்டாங்களே இனிமேலாவது நமக்கு வேலை வெட்டி கிடைக்குமானேன்னு ஒருத்தன் கேட்குறான்னா பாவம் எவ்ளோ அடி பட்டுருப்பான். என்ன நடந்தாவது பிழைப்பு ஓடிருமான்னு எதிர்பார்த்து நிற்குதுங்க பெரிய கூட்டம். அங்க வந்துட்டு நம்ம செல்லூர் ராஜு வேற காமெடி பண்ணிகிட்டு இருக்காரு. பால் விலை கூடுறதுலாம் மக்கள் பெருசா எடுத்துக்க மாட்டாங்கன்னு சொல்லிட்டாராம். ஆமா எப்படி பெருசா எடுத்துப்பாங்க.. இவ்ளோ நாள் வாங்குன அடியில எல்லாமே பழகிப்போச்சுங்குறாங்க. சரி இவ்ளோ நாள் தெர்மாகோல் வச்சு எதையோ சொல்லும் போது காமெடியா எடுத்துகிட்டவங்க, பால் விஷயத்துல கை வச்சதும் இப்ப கொஞ்சம் கொதிநிலையில தான் இருக்காங்க.. சார் அந்தப் பக்கம் போகாதீங்க.. உங்களை இல்ல, நீங்க இந்தப் பக்கம் போய் அப்டேட்டை பாருங்க..

நாகராஜ சோழன் MA. MLA

அடுத்த 5 ஆண்டுகளில் ஏடிஎம் கார்டுகள் இருக்காது!

- ஸ்டேட் பேங்க் #

ஆமா, காசே இல்லாத அக்கவுண்ட் எதுக்கு ATM கார்டு ,ஜனங்க தூக்கி வீசீருவாங்க...

கோழியின் கிறுக்கல்!!

அண்ணனும் தங்கையும் சண்டையிடாமல் விளையாடுகிறார்கள் எனில், இருவருக்கும் அப்பாவிடம் ஏதோ காரியம் ஆக வேண்டி இருக்கிறது என்று பொருள்!!

Nivedita Louis

நாம் சந்திக்கும் சில பேர் லேஸ் பாக்கெட் மாதிரி சார்! 99% காற்று, 1% தான் சரக்கு

@Ashok Kumar Thavamani

நேத்து பணம் வசூல்ல இறங்கி ரவுடித்தனம் பண்ணி கைது செய்யப்பட்ட 5 VHP ஆளுங்க பாத்ரூம்ல வழுக்கி விழுந்து மாவுக்கட்டு போட்ட போட்டோ இன்னும் வெளிய வரல. இதுக்கு முன்னாடி மாவுக்கட்டு போட்டவங்க படத்த சந்தோசமா ஷேர் பண்ணுனவங்க, கொஞ்சம் போலிஸ்ட்ட கேட்டு வாங்கிக்கொடுங்கப்பா.

கோழியின் கிறுக்கல்!!

ஒருவர் முழுக் கை சட்டையில் இருந்து அரைக் கை சட்டைக்கு மாறுகிறார் எனில்,

அவர் புதிதாய் ஜிம்மில் சேர்ந்தவர் என்று அறிக!!

பழைய சோறு

பசிக்காமலிருக்க மாத்திரைகள் விற்கபடுமாயின் ஹோட்டல்கள் மெடிக்கல் ஷாப்பாய் மாறும்..!

தூயோன்

அரசு அலுவலர்கள் கடமைகளை உணர்ந்து பணி செய்கிறார்கள்-அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு

ஆனா அவங்க கடமையை உணர 500ரூவா லஞ்சம் கொடுக்க வேண்டிருக்கு

ம ன் ன ன்

சிவாஜி படத்துல

"ஆபிஸ் ரூம்"

காவல் துறைக்கு

"பாத்ரூம்"

ட்ரீட்மெண்ட்

பர்வீன் யூனுஸ்

ஒரு படத்துக்கு தேசிய விருதைவிட பேசிய விருதுதான் பெரிது. -வைரமுத்து

பாடகி ஏசிய விருதை விட்டுட்டீங்களே..?

சோழ நாட்டு விவசாயி

அரசியலிலிருந்து ஓய்வுபெற முடிவுசெய்துள்ளேன்! - ஜெ.தீபா

அரசியல் ல இருந்தும், இவ்வளவு நாளா ஓய்வு தான எடுத்துகிட்டு இருந்தீங்க...

நெல்லை அண்ணாச்சி

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு

வரி குறைப்பு...

புதிய இந்தியா

மீண்டும்... பிறந்தது...!!!

mohanram.ko

சலூன் கடையில் இருக்கும் டிவியில் மட்டும், எந்த நிகழ்ச்சி பார்த்தாலும் சுவாரஸ்யமாகவே இருக்கு...

செந்திலின்_கிறுக்கல்கள்

முத்தலாக் சட்டத்தை தனிப்பட்ட முறையில் நான் ஆதரிக்கிறேன் ~ OPR# கூட துணைக்கு ஆள் இல்லைன்ரத சுற்றி சுற்றி சொல்றாராம்!

வானமே எல்லை

தமிழகத்தின் எதிர்காலத்தை

அதிமுகவால் தான்

காப்பாற்றமுடியும்....

...ஓபிஎஸ்

ஆமா ஆனா அதிமுகவை யாராலும் காப்பாத்த முடியாது?!

பிளாக் லைட்

ஸ்கூல் வாட்ஸாப் குரூப் ரொம்ப நாளைக்க அப்புறம் கலகலப்பா இருக்குனா குரூப்ல இருக்க எவனோ அவனுக்க கல்யாணத்துக்கு பத்திரிக்கை அனுப்பிருக்கான்னு அர்த்தம் !!

mohanram.ko

அதிமுகவுடன் இணைகிறது எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை - ஜெ.தீபா #

யாரும் சும்மா சும்மா எண்ணி பார்க்க வேணாம், எத்தனை முறை எண்ணினாலும் நாங்க 3 பேர் தான்

செந்திலின்_கிறுக்கல்கள்

வீட்டில் தினமும் நீயுஸ் பேப்பரில் கண் விழித்தால் நாம் நம் வயதை கடந்து கொண்டு இருக்கிறோம் என அறிக!

Villavan Ramadoss

ஆட்டோமொபைல் துறை வீழ்ந்து கொண்டிருக்கிறது.

சங்கி : நீங்க எல்லாரும் வண்டியோடதான் பொறந்தீங்களா. மாட்டு வண்டித்தான் நம்ம பாரம்பரியம்.

ரியல் எஸ்டேட் துறை தேங்கியிருக்கிறது.

சங்கி : ஆத்து மணல் என்ன விளையுதா? கட்டிடமா கட்டினா நாடு என்னத்துக்கு ஆகும்?? இயற்கை முக்கியம் பாஸ்.

நூல் எக்ஸ்போர்ட்கூட பலமா அடி வாங்கியிருக்காமே...

சங்கி : அப்பதாங்க உள்ளூர் சந்தை மேல கவனம் வரும், 130 கோடி மக்கள் இருக்குற மார்க்கெட் இது சார்.

பர்சனல் லோன் வாங்கறதுகூட குறைஞ்சுடுச்சாமே?

சங்கி : பர்சனல் லோன் எல்லாம் ஊதாரித்தனம்ஜி.

சேமிப்புக்கூட கீழே போயாச்சுங்க.

சங்கி : சும்மா பணத்தை டெபாசிட் பண்ணினா அது எப்படிங்க வளரும்? பணம் மார்க்கெட்டுக்கு வந்து தொழில் வளரும் பாருங்க.

ஷேர் மார்க்கெட் நாசமா போக ஆரம்பிச்சு ரெண்டு மாசமாச்சு.

சங்கி : பங்கு சந்தை ஒரு சூதாட்டம் சார். அதை ஒரு அளவா வைக்கக்கூடாது.

பிஸ்கட், ஜட்டி வியாபாரம்கூட தேங்கிப் போயிருச்சு சார்.

சங்கி : ராம ராஜ்ஜியத்துல பிஸ்கட், ஜட்டியெல்லாம் இல்ல சார். அப்ப சீக்கிரமே ராம ராஜ்ஜியம் வரப்போவுதுன்னுதானே அர்த்தம்?

யோவ் மொதலாளிங்ககூட திவாலாகப்போறோம்னு அழுவுறானுங்கய்யா.

சங்கி : அரசாங்கம் மக்களுக்காக இருக்கு, முதலாளிங்க அவங்களை அவங்களே காப்பாத்திக்கணும்.

சுத்தம், சாதாரண மக்கள் வருமானம் குறைஞ்சு போயிருக்கு, லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைஇல்லை.

சங்கி : அதுக்கு எல்லாம் சோம்பேறித்தனம், குடிதான் காரணம். அதுக்கு அரசு என்ன பண்ணும்?

அடேய், இந்த பிரச்சினை எல்லாம் உன் வீட்டையும்தான் பாதிக்கும். அது தெரியுமா உனக்கு?

சங்கி : நம்ம வீட்டுல எழவு விழுந்தா என்ன சார்... நமக்கு முஸ்லீம் கிறிஸ்டியன் எல்லாம் நாசமா போனா பத்தாதா?!?!

நாயே இதைத்தான் சுத்தி வளைச்சு இவ்ளோ நேரமா சொன்னியா?

-லாக் ஆஃப்


மேலும் படிக்க


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


டிஜிட்டல் திண்ணை: கதறி அழுத தீபா- எடப்பாடிக்கு லண்டனில் சிகிச்சை!


புதிய நாடாளுமன்றக் கட்டடம்: பிரதமர் மோடி


முப்படைகளுக்கும் ஒரே தலைவர்: அன்றே எச்சரித்த காமராஜர்


‘சென்னை யூனியன் பிரதேசமாகலாம்: சீமான்


செவ்வாய், 20 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon