மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஏப் 2020

பாலினால் வயிற்றில் அடித்துள்ளார்கள்: ஸ்டாலின்

பாலினால்  வயிற்றில் அடித்துள்ளார்கள்: ஸ்டாலின்

பால் உற்பத்தியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தவே பால் விலையைத் தமிழக அரசு உயர்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.

நெல்லை சமாதானபுரத்தில் உள்ள ஒண்டிவீரன் சிலைக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 20) மாலை அணிவித்தார். ஒண்டிவீரனின் 248ஆவது நினைவு நாள் விழாவில் கலந்து கொண்ட பின் பாளையங்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ”ஒண்டிவீரனுக்கு மணிமண்டபம், சிலை வைக்கக் கலைஞர் ஆட்சியில் முடிவு செய்யப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்பட்டது. அருந்ததியினர் சமுதாயத்தினருக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியவர் கலைஞர்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ”2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்தது முதல் மூன்றாவது முறையாகப் பால் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. வயிற்றில் பால்வார்ப்பார்கள் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அந்த பாலினால் மக்களின் வயிற்றில் அடித்திருக்கிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேறு வழியில்லாமல் பால் விலையை உயர்த்தியதாகச் சொல்கிறார். கொள்முதலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சிதான் இது. பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பால் வளத்தை பொருத்தவரை அதிக லாபத்தில் இயங்கிக் கொண்டிருப்பதாகப் பெருமையுடன் பேசுகிறார். ஆனால் முதல்வர் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்கிறார். இவர்களுக்கு இடையே முரண்பாடு இருக்கிறது” என்று விமர்சித்தார்.

நாங்குநேரி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு திமுக போட்டியிடுவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்த அவர், மாவட்டங்கள் பிரிப்பது என்பது அவர்கள் செய்யக் கூடிய லஞ்சம், ஊழலை மறைப்பதற்காகத்தானே தவிர நல்ல எண்ணத்தில் இல்லை என்றார்.

திமுக மற்றும் அதன் கூட்டணி எம்.பி.க்கள் அனைவரும் தமிழகத்துக்கு மட்டுமின்றி இந்தியாவில் ஏற்படக் கூடிய எந்த பிரச்சினைக்கும் குரல்கொடுப்பார்கள் என்றவரிடம் நீங்கள் துண்டு சீட்டு இல்லாமல் பேசமுடியாது என்று பாஜகவினர் குற்றம்சாட்டுகின்றனர் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதில் அளித்த ஸ்டாலின், “ஆதாரத்துடன் எதையும் பேச வேண்டும். பொத்தாம் பொதுவாக பேசக் கூடாது. தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்டவர்கள் போன்று வாய்க்கு வந்த மாதிரி பேசக்கூடாது” என்று விமர்சித்தார்.


மேலும் படிக்க


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


டிஜிட்டல் திண்ணை: கதறி அழுத தீபா- எடப்பாடிக்கு லண்டனில் சிகிச்சை!


புதிய நாடாளுமன்றக் கட்டடம்: பிரதமர் மோடி


முப்படைகளுக்கும் ஒரே தலைவர்: அன்றே எச்சரித்த காமராஜர்


‘கோமாளி’ வெளியானதன் பின் கதை!


செவ்வாய், 20 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon