மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஏப் 2020

ஒரே நாளில் ஐஸ்வர்யாவின் இரு படங்கள்!

 ஒரே நாளில் ஐஸ்வர்யாவின் இரு படங்கள்!

ஐஸ்வர்யா நடிப்பில் உருவாகியுள்ள மெய், கெளசல்யா கிருஷ்ணமூர்த்தி கிரிக்கெட்டர் ஆகிய இரண்டு படங்களும் ஒரே தேதியில் வெளியாகவுள்ளன.

ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், சிவகார்த்திகேயன், தர்சன் நடிப்பில் உருவான கனா திரைப்படம் பெண்கள் விளையாட்டில் ஈடுபடுவதையும் கனவு காண்பதையும் ஊக்குவிக்கும் படமாக அமைந்து ரசிகர்களின் ஆதரவை பெற்றது. கிரிக்கெட் வீராங்கனையாக ஐஸ்வர்யா நடித்த இப்படம் சென்ற ஆண்டின் வெற்றிப்படமாகவும் அமைந்தது. சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இப்படத்தில் பாடலாசிரியர், நடிகர் அருண்ராஜா காமராஜ் இயக்குநராக அறிமுகமானார். திபு நினான் தாமஸ் என்பவர் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் தெலுங்கு ரீமேக்காக கெளசல்யா கிருஷ்ணமூர்த்தி கிரிக்கெட்டர் உருவாகியுள்ளது. இப்படத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. சத்யராஜ் நடித்த பாத்திரத்தில் ராஜேந்திர பிரசாத் நடித்திருக்கிறார். பீமனேனி ஸ்ரீநிவாஸ் ராவ் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியிடவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

அதே தேதியில் தான், தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள மெய் படமும் ரிலீசாகவுள்ளது. மெடிக்கல் திரில்லராக உருவாகும் இப்படத்தின் டிரெய்லர், பாடல் காட்சிகள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் கதாநாயகனாக நிக்கி சுந்தரம் அறிமுகம் ஆகிறார். எஸ்.ஏ.பாஸ்கரன் இயக்கியுள்ளார். இவர் ஜித்து ஜோசப்பிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

ஒரே தேதியில் வெளியாகவுள்ள இரு படங்களால் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி ஸ்பெஷல் தேதியாக மாறவுள்ளது. குறிப்பாக, கெளசல்யா கிருஷ்ணமூர்த்தி கிரிக்கெட்டர் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகவுள்ளதால் ஆர்வத்துடன் காத்திருக்கிறார் ஐஸ்வர்யா.


மேலும் படிக்க


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


டிஜிட்டல் திண்ணை: கதறி அழுத தீபா- எடப்பாடிக்கு லண்டனில் சிகிச்சை!


புதிய நாடாளுமன்றக் கட்டடம்: பிரதமர் மோடி


முப்படைகளுக்கும் ஒரே தலைவர்: அன்றே எச்சரித்த காமராஜர்


‘கோமாளி’ வெளியானதன் பின் கதை!


செவ்வாய், 20 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon