மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஏப் 2020

கர்நாடகா: 17 அமைச்சர்கள் பதவி ஏற்பு!

கர்நாடகா: 17 அமைச்சர்கள் பதவி ஏற்பு!

கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை 25 நாட்களுக்குப் பிறகு இன்று (ஆகஸ்ட் 20) விரிவாக்கம் செய்யப்பட்டது. 17 பேர் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக்கொண்டனர்.

கர்நாடகாவில் முன்னாள் முதல்வர் குமாரசாமி அரசின் கூட்டணியிலிருந்த எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகியதை அடுத்து அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து ஜூலை 26ஆம் தேதி மாநில பாஜக தலைவர் எடியூரப்பா முதல்வராகப் பதவி ஏற்றுக்கொண்டார். அவரைத் தவிர அமைச்சர்கள் யாரும் பொறுப்பேற்காத நிலையில் கடந்த 25 நாட்களாக எடியூரப்பா வெள்ள பாதிப்பு உள்ளிட்ட பணிகளைத் தனி ஒருவராகக் கவனித்து வந்தார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த எடியூரப்பா, கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பேசியிருக்கிறார். அதன்படி இன்று கர்நாடக அமைச்சரவையை எடியூரப்பா விரிவுபடுத்தியுள்ளார்.

ஆளுநர் மாளிகையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் 17 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். கோவிந்த் மக்தப்பா கரஜோல், அஸ்வத் நாராயண், லட்சுமண் சங்கப்பா சாவடி, ஈஸ்வரப்பா, அசோகா, ஜெகதீஷ் ஷெட்டர், ஸ்ரீராமுலு, சுரேஷ்குமார், சோமண்ணா, சி.டி.ரவி, பஸ்வராஜ் பொம்மை, கோட்டா ஸ்ரீனிவாஸ் பூஜாரி, மதுசுவாமி, சந்திரகாந்த் கவுடா, நாகேஷ், பிரபு சவுஹான், சசிகலா அன்னசாஹிப் ஆகியோருக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில் குமாரசாமி அரசின் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து பதவி விலகிய நாகேஷும் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்.

புதிதாகப் பதவி ஏற்ற ஒவ்வொருவருக்கும் இரண்டு அல்லது மூன்று இலாகாக்கள் ஒதுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக அமைச்சரவையில் மொத்தம் 34 பேர் இடம் பெறமுடியும். தற்போது முதல்வர் உட்பட 18 பேர் இடம்பெற்றுள்ள நிலையில் 16 இடங்கள் காலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


டிஜிட்டல் திண்ணை: கதறி அழுத தீபா- எடப்பாடிக்கு லண்டனில் சிகிச்சை!


புதிய நாடாளுமன்றக் கட்டடம்: பிரதமர் மோடி


முப்படைகளுக்கும் ஒரே தலைவர்: அன்றே எச்சரித்த காமராஜர்


‘கோமாளி’ வெளியானதன் பின் கதை!


செவ்வாய், 20 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon