மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 1 டிச 2020

அத்திவரதருக்கு ஆழ்துளைக் கிணற்று நீர்!

அத்திவரதருக்கு ஆழ்துளைக் கிணற்று நீர்!

அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தை ஆழ்துளைக் கிணற்று நீரைக் கொண்டு நிரப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்திவரதர் சிலை 48 நாட்கள் வெளியே வைக்கப்பட்டு மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் சனிக்கிழமை இரவு சயன கோலத்தில் வைக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அசோகன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், அனந்தசரஸ் குளத்தை ஆழமாக தூர்வார வேண்டும் என்றும், ஒருவேளை தவறிவிட்டால், குளத்தை தூர்வாரி சுத்தம் செய்ய 40 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு வெள்ளிக்கிழமை நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அனந்தசரஸ் குளத்தில் உள்ள மண் மற்றும் நிரப்பப்படவுள்ள தண்ணீர் குறித்து ஆய்வு செய்து ஆகஸ்ட் 19ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பொற்றாமரைக் குளத்தின் நீர் இளம்பச்சை நிறத்தில் இருப்பதால், அந்த நீரை அனந்தசரஸ் குளத்தில் ஊற்றினால், குளத்தில் பாசி படிய வாய்ப்பிருப்பதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை அளித்திருந்தது.

இந்த அறிக்கையை ஏற்று, சென்னை உயர் நீதிமன்றம் அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தை ஆழ்துளைக் கிணற்று நீரைக் கொண்டு நிரப்ப உத்தரவிட்டுள்ளது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: கதறி அழுத தீபா- எடப்பாடிக்கு லண்டனில் சிகிச்சை!


முப்பெரும் விழாவில் விஜயகாந்த்: மகனுக்கு புதிய பொறுப்பு?


தனி மாவட்டமாகிறதா எடப்பாடி?


முப்படைகளுக்கும் ஒரே தலைவர்: அன்றே எச்சரித்த காமராஜர்


பணக்காரர்களை அடிப்பதா? வருமான வரித் துறைக்கு அறிவுறுத்தல்!


செவ்வாய், 20 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon