மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 20 ஆக 2019

புதிய நாடாளுமன்றக் கட்டடம்: பிரதமர் மோடி

புதிய நாடாளுமன்றக் கட்டடம்: பிரதமர் மோடி

தமிழ்நாட்டில் புதிய சட்டமன்றக் கட்டடத்தை திமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த கலைஞர் கட்டி முடித்தும், அதை அடுத்து வந்த முதலமைச்சர் ஜெயலலிதா பயன்படுத்தவில்லை. அண்மையில் ஆந்திர- தெலங்கானா பிரிதலுக்குப் பின், ஆந்திராவுக்கு புதிய சட்டமன்றத்தை சந்திரபாபு நாயுடு கட்டினார்.

இந்த வரிசையில் நமது நாட்டுக்கு புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைக் கட்டும் முடிவில் இருக்கிறார் பிரதமர் மோடி. நேற்று (ஆகஸ்டு 19) டெல்லியின் வடக்கு அவென்யூ பகுதியில், 36 எம்.பி.க்களுக்கான புதிய வீடுகளைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி அங்கே சிறிது நேரம் பேசினார்.

அப்போது அவர், “நமது மக்களவை சபாநாயகரும், மாநிலங்களவைத் தலைவர் அவர்களும் புராதனமான நமது நாடாளுமன்றக் கட்டடம் சில பாதிப்புகளுக்கும் உள்ளாகியுள்ளதை சுட்டிக் காட்டி புதிய நவீன நாடாளுமன்றக் கட்டடம் கட்டலாம் என்ற யோசனையை ஏற்கனவே முன் வைத்திருந்தனர். நான் அதிகாரிகளிடம் சொல்லியுள்ளது என்னவென்றால், இந்த பழைய நாடாளுமன்ற கட்டடத்தைப் புதுப்பிப்பதோ அல்லது புதிய நாடாளுமன்றக் கட்டடம் எழுப்புவதோ எதுவானாலும் 2022க்குள் முடித்தாக வேண்டும். நமது 75ஆவது சுதந்திர தினத்துக்குள் இதை பூர்த்தி செய்ய வேண்டும் என்று கோரியுள்ளேன். காலம் குறைவாக இருப்பதால் ஆலோசனைகள் வேகமாக நடந்து வருகின்றன. விரைவில் முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இப்போதைய நமது நாடாளுமன்றக் கட்டடம் எட்வின் லுடைன்ஸ் என்பவரால் வடிவமைக்கப்பட்டு 1921 ஆம் ஆண்டு கட்டடப் பணிகள் தொடங்கியது. 1927 ஜனவரி 18 ஆம் தேதி அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் வைசிராய் இர்வின் இந்த நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறந்து வைத்தார். அப்போதே உத்தேசமாக 83 லட்சம் ரூபாய் நாடாளுமன்றக் கட்டுமானப் பணிகளுக்கு செலவானது. இன்னும் 8 ஆண்டுகள் கடந்தால் இப்போதைய நாடாளுமன்றக் கட்டடம் நூற்றாண்டு விழாவுக்குத் தயாராகிவிடும். 2001 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். அதன் பிறகு நாடாளுமன்றக் கட்டடத்தின் பாதுகாப்பு உறுதித் தன்மை பற்றி விவாதங்கள் எழுந்தன.

இந்த நிலையில்தான், நவீனமான வசதிகள் மிக்க புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைக் கட்ட வேண்டும் என்பதில் மக்களவைத் தலைவர், மாநிலங்களவைத் தலைவர் ஆகிய இருவருமே கடந்த பட்ஜெட் தொடரின்போது கருத்து தெரிவித்திருந்தனர். அதைக் குறிப்பிட்டே பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டடம் பற்றி நேற்று பேசியிருக்கிறார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: கதறி அழுத தீபா- எடப்பாடிக்கு லண்டனில் சிகிச்சை!


முப்பெரும் விழாவில் விஜயகாந்த்: மகனுக்கு புதிய பொறுப்பு?


தனி மாவட்டமாகிறதா எடப்பாடி?


முப்படைகளுக்கும் ஒரே தலைவர்: அன்றே எச்சரித்த காமராஜர்


பணக்காரர்களை அடிப்பதா? வருமான வரித் துறைக்கு அறிவுறுத்தல்!


ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்! ...

6 நிமிட வாசிப்பு

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

'மன்னிப்பு கேட்க வேண்டும்': தலைமை நீதிபதிக்கு எதிராக வலுக்கும் ...

6 நிமிட வாசிப்பு

'மன்னிப்பு கேட்க வேண்டும்': தலைமை நீதிபதிக்கு எதிராக வலுக்கும் குரல்கள்!

செவ்வாய் 20 ஆக 2019