மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 3 ஜுன் 2020

முன்கூட்டியே ரிலீஸ் ஆகிறதா பிகில்?

முன்கூட்டியே ரிலீஸ் ஆகிறதா பிகில்?

விஜய் நடிப்பில் உருவாகிவரும் பிகில் திரைப்படம் தீபாவளிப் பண்டிகைக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே ரிலீஸாக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடிக்கும் பிகில் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகப் பணியாற்றுகிறார்.

மெர்சல், சர்கார் என விஜய் நடிப்பில் வெளியாகிய இரு படங்களும் முறையே 2017, 2018ஆம் ஆண்டுகளின் தீபாவளிப் பண்டிகை அன்று வெளியாகி வசூல் சாதனை படைத்தன. தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் நடிப்பில் தீபாவளி அன்று படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. பிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானபோதே இதற்கான அறிவிப்பும் வெளியானது.

இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. எனவே அதற்கு முன்கூட்டியே படத்தை வெளியிட்டால்தான் விடுமுறை நாட்களின் வசூலைக் குறிவைக்க முடியும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் படத்தை அக்டோபர் 24ஆம் தேதி வியாழன் அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிவருகிறது.

தீபாவளிக்கு மூன்று நாள்களுக்கு முன்னதாக படம் வெளியாகும்போது ரசிகர்களின் கூட்டம் நிறைவடைந்த பின்னர் தீபாவளி அன்று பொதுப் பார்வையாளர்களை ஈர்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான பேட்ட, விஸ்வாசம் ஆகிய படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஜனவரி 10ஆம் தேதி பண்டிகைக்கு சில நாள்கள் முன்னதாகவே வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் நடிக்கும் பட்டாஸ் திரைப்படமும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: கதறி அழுத தீபா- எடப்பாடிக்கு லண்டனில் சிகிச்சை!


முப்பெரும் விழாவில் விஜயகாந்த்: மகனுக்கு புதிய பொறுப்பு?


தனி மாவட்டமாகிறதா எடப்பாடி?


முப்படைகளுக்கும் ஒரே தலைவர்: அன்றே எச்சரித்த காமராஜர்


பணக்காரர்களை அடிப்பதா? வருமான வரித் துறைக்கு அறிவுறுத்தல்!


செவ்வாய், 20 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon