மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 15 ஜன 2021

கிச்சன் கீர்த்தனா: முட்டைகோஸ் மிளகு பொரியல்

கிச்சன் கீர்த்தனா: முட்டைகோஸ் மிளகு பொரியல்

மழைக்காலங்களில் நாம் தண்ணீர் அதிகமாக அருந்துவதில்லை. இதனால் மலச்சிக்கல் வரும் என்பதைக் கவனத்தில்கொள்ள வேண்டும். எனவே, நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். மலச்சிக்கல் வந்தால் அவ்வப்போது காய்ந்த திராட்சைப்பழங்கள், கொய்யாப்பழம், பப்பாளி போன்றவற்றைச் சாப்பிட்டு நிவாரணம் பெறலாம். அத்துடன் உணவில் இந்த முட்டைகோஸ் மிளகு பொரியலைச் சேர்த்துக்கொண்டால் உடல் சூட்டைத் தணிக்கும். நாள்பட்ட மலச்சிக்கலைப் போக்கும். குடல் சளியைப் போக்கும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். செரிமானத்துக்கு உதவும்.

என்ன தேவை?

முட்டைகோஸ் - 200 கிராம்

தேங்காய்த் துருவல் - கால் கப்

மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

முட்டைகோஸிலுள்ள தண்டுகளை நீக்கிவிட்டு இதழ் இதழாகப் பிரித்துக்கொள்ளவும். பின்னர் நீளமாக மெல்லியதாக நறுக்கிக்கொள்ளவும். இட்லித் தட்டில் நறுக்கிய முட்டைகோஸை வைத்து, அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து, 5 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்துக்கொள்ளவும். பின்னர் அகலமான பாத்திரத்துக்கு மாற்றிக்கொள்ளவும். வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு சூடானதும் வேகவைத்த முட்டைகோஸைச் சேர்த்து ஒரு நொடி வதக்கவும். இதனுடன் உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைத்துவிடவும். கடைசியில் தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

குறிப்பு

இதை முட்டைகோஸ் சாலட் என்றும் கூறலாம். இதை தோசையின் மேல் வைத்து சுவையான முட்டைகோஸ் ஊத்தப்பமும் செய்யலாம்.

நேற்றைய ரெசிப்பி: மிளகு ரொட்டி


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: கதறி அழுத தீபா- எடப்பாடிக்கு லண்டனில் சிகிச்சை!


முப்பெரும் விழாவில் விஜயகாந்த்: மகனுக்கு புதிய பொறுப்பு?


தனி மாவட்டமாகிறதா எடப்பாடி?


முப்படைகளுக்கும் ஒரே தலைவர்: அன்றே எச்சரித்த காமராஜர்


பணக்காரர்களை அடிப்பதா? வருமான வரித் துறைக்கு அறிவுறுத்தல்!


செவ்வாய், 20 ஆக 2019

chevronLeft iconமுந்தையது