மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 19 ஆக 2019

‘கோமாளி’ வெளியானதன் பின் கதை!

‘கோமாளி’ வெளியானதன் பின் கதை!

இராமானுஜம்

திருச்சி விநியோகஸ்தர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் கோமாளி பட தமிழ்நாட்டு விநியோக உரிமையை வாங்கியிருந்தார்.

சங்க உறுப்பினருக்கு ஆதரவாக இருக்க வேண்டிய திருச்சி விநியோகஸ்தர்கள் சங்கம் அவருக்கு எதிராக செயல்படுவதற்கு என்ன காரணம் என்று விசாரித்தோம்.

திருச்சி நாடளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தவர் அடைக்கலராஜ். அவரது மறைவுக்கு பின் சினிமா விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர் என திருச்சி ஏரியாவில் தமிழ் சினிமாவின் அடையாளமாக இருப்பவர் பிரான்சிஸ். திருச்சி விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் தேர்தலில் கேசவனிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். தனியார் போக்குவரத்தில் கண்டக்டராக வேலை செய்த ஜி.டி என்கிற தியாகராஜன் பிரபல விநியோகஸ்தராக வளர்ச்சியடைய காரணமாக இருந்தவர் பிரான்சிஸ்.

அவரைத் தோற்கடித்த கேசவன் தலைவராக இருக்கும் சங்க முடிவுக்கு எதிராக தியாகராஜன் செயல்படுவது மட்டுமின்றி செயலாளர் ரவியை தன் கரன்சி கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதால் திரையரங்க உரிமையாளர்களுக்கு ஆதரவாக விநியோகஸ்தர்கள் சங்கம் செயல்படுகிறது என்கின்றனர்.

இவர்களுக்கு மறைமுகமாக திருச்சி பரதன் பிலிம்ஸ் விஸ்வநாதன் ஆதரவு கொடுப்பதால் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சுயமாக செயல்பட இயலவில்லை என்கின்றனர் திருச்சி விநியோகஸ்தர்கள்.

இந்த நிலையில் கோமாளி படம் வெளியிடுவதில் சிக்கல் உருவானது. மிஸ்டர் லோக்கல் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கொடுத்த புகாரின் அடிப்படையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களை சந்தித்து தயாரிப்பாளர் சங்க ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் படத்தை வெளியிட சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர்.

கோமாளி படம் திரையிடுவதில் உள்ள பிரச்சனையை சுமுகமாக முடித்து வைக்க திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு ஆலோசனை வழங்குகிறார். ஆனால் இது போன்ற சினிமா பிரச்சினைகளில் அமைச்சர் சட்டரீதியாக ஆணை பிறப்பிக்க முடியாது அதனால்தான் அமைச்சர் கடம்பூர் ராஜு நல்லதுக்கு பொல்லாப்பு இல்லாமல் மாவட்ட ஆட்சியாளர் அவர்களிடம் பிரச்சனையில் தலையிட ஆலோசனை வழங்கினார் என்கின்றனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரான்சிஸ் அவர்களை அழைத்து பேசுகிற போதும் மிஸ்டர் லோக்கல் படத்தின் மூலம் மிகப் பெரும் நஷ்டத்தை சந்தித்திருக்கிறோம். அதனால் சங்கம் தான் இது பற்றி முடிவு எடுக்க முடியும் தனிப்பட்ட முறையில் நான் எதுவும் உத்திரவாதம் தர முடியாது என கூறியதால், இந்த சூழ்நிலையில் கோமாளி படத்தின் திருச்சி ஏரியா உரிமையை வாங்கிய ராக்போர்ட் முருகானந்தம் பைனான்ஸ் விநியோகம் இவை இரண்டிலும் தமிழ் சினிமாவில் முன்னணி நபராக இருந்து வரும் பரதன் பிலிம்ஸ் விஸ்வநாதன் உதவியை நாடுகிறார்.

இவரது வார்த்தைக்கு திருச்சி சினிமா வட்டாரத்தில் முக்கியத்துவம் உண்டு என்பதால் திரையரங்கு உரிமையாளர்களை அழைத்து கோமாளி படம் திரையிடுவதற்கு எந்தவிதமான இடையூறும் செய்ய வேண்டாம்.

மிஸ்டர் லோக்கல் படத்தில் ஏற்பட்ட நஷ்ட தொகைக்கு அட்வான்ஸாக அவரே ரூபாய் 20 லட்சத்தை முன்பணமாக தருவதாக உறுதியளித்த பின்னரே நள்ளிரவில் அனைத்து திரையரங்குகளிலும் கோமாளி படம் திரையிடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது .

இது எப்படி தயாரிப்பாளர் சங்கத்தில் ஆலோசனைக் குழு எடுத்த முயற்சிக்கான வெற்றியாக கருத முடியும் என்கின்றனர் திருச்சி ஏரியா திரையரங்கு உரிமையாளர்கள். மேலும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இருந்த பொழுது அவர்கள் எடுத்த முடிவுகளையே முழுமையாக அமுல்படுத்த இயலவில்லை.

தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனைக் குழு முடிவை திருச்சி திரையரங்கு உரிமையாளர்கள் ஏற்க மறுத்தது ஏன்?

நாளை பகல் ஒரு மணி பதிப்பில்

கோமாளி’ பஞ்சாயத்து: நிஜ கோமாளியானதா தயாரிப்பாளர்கள் சங்கம்!


மேலும் படிக்க


முப்பெரும் விழாவில் விஜயகாந்த்: மகனுக்கு புதிய பொறுப்பு?


தனி மாவட்டமாகிறதா எடப்பாடி?


முப்படைகளுக்கும் ஒரே தலைவர்: அன்றே எச்சரித்த காமராஜர்


பணக்காரர்களை அடிப்பதா? வருமான வரித் துறைக்கு அறிவுறுத்தல்!


காஷ்மீர் சிறைகளில் இடமில்லை!


கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

திங்கள் 19 ஆக 2019