மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 11 ஆக 2020

அத்திவரதர் குளத்தில் ஆர்.எஸ்.எஸ்.

அத்திவரதர் குளத்தில் ஆர்.எஸ்.எஸ்.

காஞ்சிபுரம் அத்திவரதர் சிலை நேற்று (ஆகஸ்டு 17) அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டதை அடுத்து அத்திவரதர் வைபவம் முறைப்படி முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் இன்று (ஆகஸ்டு 18 ) காலை ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளும், தொண்டர்களும் நூற்றுக் கணக்கில் அத்திவரதர் குளத்தைச் சுற்றிலும் குவிந்தனர். அத்திவரதரை வரிசையில் நின்று பார்க்க ஏற்பாடுகள் செய்த இடத்தில் முதலில் கூடிய ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் இந்த இந்துபூமியை, புனித பூமியை மதிப்போம் என்றெல்லாம் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். (வீடியோ இணைக்கப்பட்டுள்ளது) இந்தக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் கலந்துகொண்டார். அதன்பின் ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் கோவில் வளாகம் குள வளாகத்தில் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தன் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பொன்.ராதாகிருஷ்ணன்,

“கடந்த 48 நாட்களில் சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்தியா முழுவதிலிருந்தும் வந்திருந்து அத்திவரதரின் அருளை பெற்றுள்ளனர். இதனிடையே காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டிருந்த வரதராஜ பெருமாள் கோயிலைச் சுற்றி தற்போது தூய்மைப்படுத்தும் பணி ஆர் எஸ் எஸ்,விஸ்வ இந்து பரிஷத், இந்துமுன்னணி,பாஜக ஆகிய அமைப்புகள் செய்து வருகின்றன.

பிரதமர் ,திரு. நரேந்திர மோடி அவர்கள் வலியுறுத்தும் தூய்மையான இந்தியாவை உருவாக்க கரம் கோர்ப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.


மேலும் படிக்க


பிக் பாஸ் 3: மதுமிதாவைச் சுற்றி நடந்தது என்ன?


ஆந்திரா பாணியில் துணை முதல்வர்கள்: எடப்பாடிக்கு புதிய நெருக்கடி!


கோமாளி: என்னடா இப்படி பண்ணி வெச்சிருக்கீங்க?


மோட்டார் வாகன நிறுவனங்கள் மூடல்: அனைவருக்குமான எச்சரிக்கை!


உடலுறவு இல்லாமல் "உறவு" சாத்தியமில்லையா?


ஞாயிறு, 18 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon