மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 11 ஜூலை 2020

திருட்டு பைக்கில் செல்போன் பறிப்பு : கல்லூரி மாணவி கைது!

திருட்டு பைக்கில் செல்போன் பறிப்பு : கல்லூரி மாணவி கைது!

சென்னையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவி மற்றும் அவருடைய நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் குற்றச்சம்பவங்களைத் தடுக்க 50 மீட்டருக்கு ஒரு சிசிடிவி வைக்கப்பட்டு காவல் துறை ஆணையர் விஸ்வநாதன் தலைமையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பில் ஈடுபடுபவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் செல்போன் பறிப்புக்கு உடந்தையாக இருந்த கல்லூரி மாணவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் லிப்சா. இவர் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் சன் பிளாசா அருகே தனது தோழியுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் லிப்சாவின் சாம்சங் செல்போனை பறித்துச் சென்றனர். இதுகுறித்து தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் லிப்சா புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதன்மூலம் செல்போன் பறிக்க உபயோகித்த இரு சக்கர வாகனத்தின் நம்பர் பிளேட்டை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அது திருட்டு வாகனம் என்பது தெரியவந்தது. மேலும் அந்த வாகனத்தில் வந்த ஒருவர் கல்லூரி மாணவி என்பதுதான் மற்றொரு அதிர்ச்சித் தகவல்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அனைத்து காவல் நிலையங்களுக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரது புகைப்படங்களையும் அனுப்பி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் இருவரும் சைதாப்பேட்டையில் உள்ள லாட்ஜ் ஒன்றில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த லாட்ஜ்க்கு சென்ற போலீசார் இருவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். இதில் ஒரு கையில் வாகனத்தை ஓட்டிக்கொண்டு மற்றொரு கையில் லிப்சா கையிலிருந்த செல்போனை பறித்தது ராஜூ(29) என்பதும் அவர் மீது ஏற்கனவே வடபழனி காவல் நிலையத்தில் செல்போன் பறிப்பு, வாகன திருட்டு ஆகிய வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. அவருடன் பின் அமர்ந்திருந்த மாணவி, தாம்பரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு விஷ்வல் கம்யூனிக்கேஷன் படித்து வந்ததும் தெரியவந்துள்ளது.


மேலும் படிக்க


நேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை!


வேலூர் ரிசல்ட்: அதிமுக - பாஜக மோதல்!


எந்தச் சட்டம் அதிகாரம் வழங்கியது? தகவல் கேட்கும் இன்ஸ்பெக்டர்!


கணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்!


அத்திவரதர் சர்ச்சை: கலெக்டர் பெயரைக் குறிப்பிடத் தயங்கும் ஐபிஎஸ் சங்கம்!


புதன், 14 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon