மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 22 அக் 2020

சீன் போட வெளிநாடு செல்கிறாரா எடப்பாடி? - ஸ்டாலின்

சீன் போட வெளிநாடு செல்கிறாரா எடப்பாடி? - ஸ்டாலின்

நீலகிரியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்வையிட சென்றது தொடர்பாகத் தன்னை விமர்சித்த முதல்வருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதிலளித்தார்.

நீலகிரி, கோவை மாவட்டங்களில் பெய்த கனமழையால் அப்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 11, 12 ஆகிய தேதிகளில் நீலகிரி சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “ஸ்டாலின் விளம்பரப்படுத்துவதற்காக நீலகிரி சென்றுள்ளாரா? தற்போது அவர் எதிர்க்கட்சி. ஆளுகின்ற கட்சியாக அதிமுகதான் உள்ளது. நீலகிரியில் பாதிப்புக்குள்ளான அடுத்த நாளே வருவாய்த் துறை அமைச்சர் அங்கு சென்று பணிகளை மேற்கொண்டார். ஸ்டாலின் விளம்பரம் தேட ஒருநாள் செல்வார். அங்கு சீன் காட்டுவார், பத்திரிகைகளில் பேட்டியளித்துவிட்டுச் சென்றுவிடுவார். ஆனால், நாங்கள் அப்படி அல்ல. அரசு துரிதமான நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 13) செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், “நான் என்னவோ விளம்பரத்துக்காக சீன் காட்ட நீலகிரி சென்றதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார். தற்போது அவர் அமெரிக்காவுக்கும் லண்டனுக்கும் பயணம் செல்லவுள்ளதாகச் செய்தி வந்துள்ளது. சீன் காட்ட அவர் செல்கிறாரா என்று சொல்ல நீண்ட நேரமாகிவிடாது. அவரைப் போல முதல்வர் என்ற பொறுப்பை மறந்து பொறுப்பிழந்து இவ்வளவு கீழ்த்தரமாகப் பேசும் அளவுக்கு நான் செல்ல மாட்டேன். நேற்று விமானம் மூலம் கோவைக்கு வந்திருக்கிறார். நியாயமாக ஊட்டிக்கு அவர் சென்றிருக்க வேண்டும். ஆனால், செல்லவில்லை. அதற்கான எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை. முதலில் அதற்கு அவர் பதில் கூறட்டும்” என்று காட்டமாகப் பதிலளித்தார்.

இதற்கிடையே நேற்று நீலகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், “நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய வந்துள்ளேன். ஸ்டாலின் போன்று போஸ் கொடுக்க வரவில்லை” என்று விமர்சித்தார்.


மேலும் படிக்க


டிவி கொடுக்கும் ஜியோ!


கதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் பதவி?


கணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்!


இரட்டைக் குழல் துப்பாக்கி!


டிஜிட்டல் திண்ணை: அமித் ஷா விழா- ரஜினி வந்தது எப்படி?


புதன், 14 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon