மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 21 ஜன 2020

ஊழியர்களைத் தாக்கிய கொரிய நிறுவன உரிமையாளர்!

ஊழியர்களைத் தாக்கிய கொரிய நிறுவன உரிமையாளர்!

சென்னையில் கொரியாவைச் சேர்ந்த தங்கும் விடுதி உரிமையாளர் தன்னிடம் பணியாற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களைத் தாக்கும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

ஸ்ரீபெரும்புதூருக்கு அருகில் உள்ள தண்டலம் பகுதியில் உள்ளது வொன் ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம். கொரியாவைச் சேர்ந்த வொன் ஜி-மூன் இதை நடத்திவருகிறார். இதில் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பலரை வேலைக்கு அமர்த்தியுள்ளார். தினமும் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு ஊழியர்களைத் தரக்குறைவாகப் பேசுவதும், தாக்குவதும் என அத்துமீறி நடந்துவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வடகிழக்கு மாணவர்களுக்காக சென்னையில் இயங்கிவரும் மாணவ அமைப்பான ஸெலியன்கிராங் ஸ்டூடண்ட்ஸ் யூனியனின் தலைவர் பௌஜட்லங் ஆர்.பன்மை என்பவர் கடந்த வெள்ளி அன்று ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவேற்றியுள்ளார். அதில் வொன் ஹோட்டல்ஸ் உரிமையாளர் வடகிழக்கு இளைஞர்களைத் தாக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

நாகா ஸ்டூடண்ட்ஸ் யூனியன், நார்த் ஈஸ்ட் இந்தியா வெல்ஃபேர் அசோஸியேஷன் ஆகிய அமைப்பினர் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு உதவுவதாக பௌஜட்லங் ஆர்.பன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஸியோமி என்ற 27 வயது இளைஞரும் அந்த வீடியோவில் தாக்கப்படுகிறார். ஜூலை மாதம்தான் அவர் இந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். “அவர் இரவில் குடித்துவிட்டு எங்களை அடிப்பார். ஆனால், எங்களிடம் அப்போது அதற்கான ஆதாரம் இல்லை. அதனால்தான் வீடியோ எடுத்தோம்” என்று ஸியோமி தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு வடகிழக்கு மாநிலத்தவர்கள் நலனுக்காக இயங்கிவரும் அமைப்புகள் உதவி புரிந்துள்ளன. வொன் மீது 294(பி), 323 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் நாகலாந்து டிஜிபிக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து... வைகோ-அழகிரி காரசார மோதல்!


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


துரைமுருகன் சொந்த ஊர் ரிசல்ட்!


மணிகண்டன் - உடுமலை ராதாகிருஷ்ணன் - வேலுமணி: எடப்பாடியின் கில்லாடி அரசியல்!


அத்திவரதர் மோதல் :பொன்னையா கலெக்ட்டரான பின்னணி!


செவ்வாய், 13 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon