மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 4 ஜுன் 2020

தாமு உறுதி: சாலையோரக் கடைகளிலும் தரமான உணவு!

தாமு உறுதி: சாலையோரக் கடைகளிலும் தரமான உணவு!

செஃப் என்றாலே தமிழ்நாட்டு மக்களுக்கு முதலில் நினைவுக்கு வருபவர் தாமு. விதவிதமான உணவு வகைகளை விறுவிறுவென சமைப்பதில் இவருக்கு நிகர் இவர் மட்டுமே. சமையல் மீதான அளவுகடந்த காதலால், ஒரே நாளில் இடைவெளி இல்லாமல் 617 உணவு வகைகளைச் சமைத்து, கின்னஸ் உலக சாதனையைப் படைத்தவர் செஃப் தாமு. இப்போது இவர், செளத் இந்தியா செஃப்ஸ் அசோஸியேஷன் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.

தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டபின் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய செஃப் தாமு, “தரமான உணவுகள் எளிய மக்களுக்கும் கிடைக்க வேண்டும். சாலையோரங்களில் இயங்கும் கடைகளிலும் தரமான உணவைத் தர முடியும். அந்தக் கடைகளின் விற்பனையாளர்களை அழைத்துக் கொஞ்சம் பயிற்சி கொடுத்தால் போதும். தரமான உணவுகள் அனைவருக்கும் கிடைக்கும். அதற்கான செயலில் இந்தச் சங்கத்தின் மூலமாக இறங்கப் போகிறோம். அவர்களை ஒன்று திரட்டி இலவசப் பயிற்சி அளிக்கும் திட்டத்தைத் தயாரித்துள்ளோம். இதற்கு அரசாங்க ஆதரவும் தேவை. அதற்காக முதல்வரைச் சந்திக்க உள்ளோம்” என்றார்.

மேலும், “பாரம்பரிய உணவுகள் குறித்த விழிப்புணர்வு இப்போது மக்களிடம் அதிகரித்து வருகிறது. இது வரவேற்க வேண்டியது. இதை ஊக்கப்படுத்தும் விதத்தில் பயிற்சிப் பட்டறைகள் நடத்தவுள்ளோம். அத்துடன் சமையற்கலையில் நிபுணத்துவம் பெறும் வகையில் கேட்டரிங் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் அளிக்க உள்ளோம். சமையற்கலை படிக்க ஆர்வமுள்ள ஏழை மாணவர்களுக்கு உதவ இருக்கிறோம்” என்றார்.

1998ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1,500 உறுப்பினர்களைக் கொண்ட செளத் இந்தியா செஃப்ஸ் அசோஸியேஷனில் டாக்டர் செஃப் தாமு மூன்று ஆண்டுகள் தலைவர் பொறுப்பில் இருப்பார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து... வைகோ-அழகிரி காரசார மோதல்!


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


துரைமுருகன் சொந்த ஊர் ரிசல்ட்!


மணிகண்டன் - உடுமலை ராதாகிருஷ்ணன் - வேலுமணி: எடப்பாடியின் கில்லாடி அரசியல்!


அத்திவரதர் மோதல் :பொன்னையா கலெக்ட்டரான பின்னணி!


செவ்வாய், 13 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon