மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஆக 2019

கணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்!

கணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்!

வேலூர் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட்ட கதிர் ஆனந்த் சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்று துரைமுருகனின் உட்கட்சி எதிரிகள் கூட கணக்குப் போட்டிருந்தார்கள். ஆனால் அதையும் பொய்யாக்கி வெறும் எட்டாயிரம் வாக்கு வித்தியாசத்தில் கதிர் வெற்றிபெற்றார்.

கதிர் வெற்றி அடைந்ததும் அவரது அடுத்த கட்ட அரசியல் பயணம் பற்றி துரைமுருகன் சென்னையில் இருந்தபடி சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார். அதேநேரம், ‘இவ்வளவு மோசமான வாக்கு வித்தியாசத்துக்கு என்ன காரணம்?’ என்று வேலூரில் இருந்தபடியே விசாரணையை முடுக்கிவிட்டிருக்கிறார் கதிர் ஆனந்தின் மனைவியும், துரைமுருகனின் மருமகளுமான சங்கீதா

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் வாணியம்பாடி சட்டமன்றத்தில் மட்டும்தான் திமுக வேட்பாளர் அதிமுக வேட்பாளரை விட 22 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றார். மற்ற அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வாக்குகள் பின் தங்கிவிட்டார்.

இந்தப் பட்டியலை கையில் வைத்துக் கொண்டசங்கீதா, ஒவ்வொரு சட்டமன்ற பொறுப்பாளரையும் போனில் பிடித்து சகட்டுமேனிக்கு விளாசி வருவதாகச் சொல்கிறார்கள் வேலூர் திமுகவினர்.

“அந்த வகையில் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் கதிர் ஆனந்த் 9 ஆயிரத்து 549 வாக்குகள் குறைவாகப் பெற்றிருக்கிறார். அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் நந்தகுமார், திமுகவின் வேலூர் மத்திய மாவட்டச் செயலாளரும் கூட. இந்நிலையில் அவரிடம் விசாரணை நடத்தியிருக்கிறார் சங்கீதா.

’நீங்க எம்.எல்.ஏ. மட்டுமில்ல... மாவட்டச் செயலாளரும் கூட. அப்படி இருக்கும்போது உங்க தொகுதியில எப்படி இவ்ளோ ஓட்டு குறைஞ்சது? நீங்க எம்.எல்.ஏ.வா வந்த கதை ஞாபகம் இருக்கா? உங்களை வேட்பாளரா அறிவிச்சவுடனே கட்சி நிர்வாகிகள் எல்லாம் வந்து மாமாவை (துரைமுருகனை) கன்னாபின்னானு திட்டினாங்க. உங்களுக்கு சீட் கொடுக்கக் கூடாதுனு தகராறு பண்ணினாங்க. ஆனா, அதெல்லாம் சகிச்சுக்கிட்டு மாமா உங்களை வேட்பாளரா ஆக்கி எம்.எல்.ஏ.வும் ஆக்கினாரு. அவருக்கு நீங்க பண்ற நன்றி இதுதானா..;. வாங்கின காசெல்லாம் என்னாச்சு?” என்று கடுமையாகவே கேட்டிருக்கிறார் சங்கீதா

இதை சற்றும் எதிர்பாராத நந்தகுமார், ‘நான் ஒரு பைசா எனக்காக எந்த காசும் எடுத்துக்கிட்டதில்ல. தலைவர் (துரைமுருகன்) சொனன் மாதிரிதான் செஞ்சேன். எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தாச்சு; எல்லா தொகுதியிலயும் குறைஞ்சது மாதிரிதான் என் தொகுதியிலயும் குறைஞ்சிருக்கு’ என்று ஏதேதோ விளக்கம் கொடுத்திருக்கிறார்.

ஆனால் சங்கீதாவோ, “இந்த விளக்கமெல்லாம் பத்தாது. யார்கிட்ட எவ்வளவு காசு கொடுக்கப்பட்டுச்சு. அது சரியா போச்சா.. ஒழுங்கா செலவு பண்ணப்பட்டதானு எனக்கு கணக்கு வேணும்” என்று உத்தரவிட்டிருக்கிறார்..

இதனால் நொந்து போன நந்தகுமார், “இவ்வளவு வருசமா பழகிட்டிருக்கிற என்கிட்ட துரைமுருகன் கூட இப்படியெல்லாம் பேசினதில்ல. ஆனால் கதிர் ஆனந்த் ஜெயிச்சு ஒரு வாரம் கூட ஆகல. அதுக்குள்ள அவர் மனைவி இவ்வளவு அதிகாரம் பண்றாங்களே... இனி போகப் போக என்னாகுமோ?” என்று கோபமும் ஆதங்கமுமாக குமைந்துகொண்டிருக்கிறார்” என்கிறார்கள் அணைக்கட்டு திமுகவினர்.

அணைக்கட்டில் மட்டுமல்ல, வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதி திமுகவினரும், உடனடியாக தன் குடும்ப ஆதிக்கத்துக்கு துரைமுருகன் அணைக்கட்ட வில்லையென்றால் விளைவுகள் வேறு மாதிரி ஆகிவிடும்” என்று உறுமிக் கொண்டிருக்கிறார்கள்.


மேலும் படிக்க


கதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் பதவி?


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


டிவி கொடுக்கும் ஜியோ!


இரட்டைக் குழல் துப்பாக்கி!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து... வைகோ-அழகிரி காரசார மோதல்!


ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்! ...

6 நிமிட வாசிப்பு

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

'மன்னிப்பு கேட்க வேண்டும்': தலைமை நீதிபதிக்கு எதிராக வலுக்கும் ...

6 நிமிட வாசிப்பு

'மன்னிப்பு கேட்க வேண்டும்': தலைமை நீதிபதிக்கு எதிராக வலுக்கும் குரல்கள்!

செவ்வாய் 13 ஆக 2019