மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

2.0: லைகா தரமறுக்கும் சம்பள பாக்கி!

2.0: லைகா தரமறுக்கும் சம்பள பாக்கி!

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 2.0. லைகா தயாரித்த அந்தப் படத்தின் சப் டைட்டில் பணியை செய்ததற்காக தனக்கு இன்னும் சம்பளம் தரவில்லை என்று மொழிபெயர்ப்பாளர் ரேக்ஸ் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி உலகம் முழுவதும் 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக அறிவிக்கப்பட்ட படம் 2.0. ஆனால் அந்தப் படத்தில் பணியாற்றிய ஒருவருக்கு படம் வெளியாகி ஒரு வருடத்திற்குப் பின்னரும் சம்பளம் தராதது திரைத்துறையில் பரவலாக பேசப்பட்டுவருகிறது.

“லைகா நிறுவனம் எப்போது எனக்கும் எங்கள் குழுவினருக்கும் சம்பளம் தருவீர்கள்”என்று டிவிட்டரில் கேள்வி எழுப்பிய ரேக்ஸ், “நாங்கள் இரு மொழிகளின் ரீல்களை நம்பிக்கையுடன் ஒப்படைத்தோம். படத்தில் நடித்த நடிகர்கள், படக்குழுவினருக்கு சம்பளம் கொடுத்திருப்பீர்கள் என நினைக்கிறேன். தாமதத்தை பொறுத்துக்கொள்ளலாம், ஆனால் எனது அழைப்புகளையோ, குறுஞ்செய்திகளையோ கவனிக்காமல் மௌனம் சாதிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது என்று பதிவிட்டிருந்தார்.

விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் முதல் தற்போது வரை 500 படங்களுக்கும் மேல் சப் டைட்டில் பணிகளை மேற்கொண்டுள்ளார். ஷங்கர் - ரஜினி கூட்டணியில் இதற்கு முன்னர் வெளியான எந்திரன் படத்திலும் ரேக்ஸ் பணியாற்றியுள்ளார். அந்தப் படத்திற்கும் இன்னும் சம்பளம் தரப்படவில்லை என்று கூறியுள்ளார்.

இந்தப் பதிவுக்குப் பின்னர் லைகாவிற்கு எதிராகவும் 2.0 படக்குழுவில் உள்ள ஷங்கர், ரஜினிகாந்த் ஆகியோருக்கு எதிராகவும் பலரும் டிவிட்டரில் கருத்து தெரிவித்தனர்.

தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், “நன்றி. எனக்கு பதில் சொல்லவேண்டியது லைகா நிறுவனம் மட்டுமே. ரஜினிகாந்தோ, ஷங்கரோ அல்ல. ஏன் இயக்குநரையும், நடிகரையும் இழுக்கிறீர்கள், அவர்கள் வாழ்நாள் சாதனையாளர்கள். தயவு செய்து வேண்டாமே. நான் அவர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவர்களை தொல்லைபடுத்த விரும்பவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.


மேலும் படிக்க


கதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் பதவி?


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


டிவி கொடுக்கும் ஜியோ!


இரட்டைக் குழல் துப்பாக்கி!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து... வைகோ-அழகிரி காரசார மோதல்!


செவ்வாய், 13 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon