மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 4 ஜுன் 2020

காஞ்சி கலெக்டர் மீது வழக்கு!

காஞ்சி கலெக்டர் மீது வழக்கு!

காவல் ஆய்வாளரை ஒருமையில் பேசிய விவகாரம் தொடர்பாகக் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் தற்போது காஞ்சிபுரத்தில் நடைபெற்று வருகிறது. இங்குக் கூட்டம் அலைமோதும் அதே வேளையில் விஐபி, விவிஐபி பாஸ்கள் தொடர்பான சர்ச்சைகளும் அதிகரித்து வருகின்றன. விஐபி வரிசையில் பொது மக்களை அனுப்பியதாகக் கடந்த 9ஆம் தேதி காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா, காவல் ஆய்வாளர் ஒருவரை ஒருமையில் பேசும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், அவருக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளன. இதற்கிடையே, காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறது. நான் எந்த உள்நோக்கத்துடனும் யாரையும் குறிப்பிட்டுப் பேசவில்லை என்று ஆட்சியர் பொன்னையா விளக்கமளித்திருந்தார்.

இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானதை அடுத்து, இவ்விவகாரம் குறித்து தாமாக முன் வந்து தமிழக மனித உரிமை ஆணையம் இன்று (ஆகஸ்ட் 13) வழக்குப்பதிவு செய்திருக்கிறது. பொதுமக்கள், சக காவலர்கள் முன் ஆய்வாளரைத் திட்டியது மனித உரிமை மீறல் இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ள மனித உரிமை ஆணையம் காஞ்சிபுரம் ஆட்சியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர், சட்ட ஒழுங்கு டிஜிபி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் 2 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


மேலும் படிக்க


கதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் பதவி?


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


டிவி கொடுக்கும் ஜியோ!


இரட்டைக் குழல் துப்பாக்கி!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து... வைகோ-அழகிரி காரசார மோதல்!


செவ்வாய், 13 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon