மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 4 ஜுன் 2020

நேற்று கர்நாடகா, இன்று சிக்கிம், நாளை..?

நேற்று கர்நாடகா, இன்று சிக்கிம், நாளை..?

சிக்கிம் மாநிலத்திலுள்ள முக்கியமான பிராந்தியக் கட்சியான சிக்கிம் ஜனநாயகக் கட்சியின் (எஸ்.டி.எஃப்) 10 எம்.எல்.ஏக்கள் இன்று பாஜகவில் இணைந்துள்ளனர்.

வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்த வரை பாஜக அதிகாரத்தில் இல்லாத ஒரே மாநிலமாக சிக்கிம் கருதப்படுகிறது. இன்று புது டெல்லியில், சிக்கிம் மாநிலத்திலுள்ள முக்கியமான பிராந்தியக் கட்சியான சிக்கிம் ஜனநாயகக் கட்சியின் (எஸ்.டி.எஃப்) 10 எம்.எல்.ஏக்கள் பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா, பொதுச்செயலாளர் ராம் மாதவ் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளனர்.

32 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட சிக்கிம் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 17 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தது. நீண்ட காலம் முதலமைச்சர் பதவியில் இருந்த பவன் குமார் சாம்லிங் தலைமையிலான சிக்கிம் ஜனநாயக முன்னணி 15 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது அவரது கட்சியைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏக்கள் பாஜக-வில் இணைந்துள்ளதால் முன்னாள் சிக்கிம் முதல்வர் பவன் குமார் சாம்லிங்கிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத பாஜக-வில் தற்போது 10 எம்.எல்.ஏக்கள் இணைந்திருப்பதால் சிக்கிம் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக கட்சி தற்போது அதிகாரத்தில் இல்லாத மாநிலங்களில் தனது தளத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றது.

கர்நாடகாவில் கடந்த 13 மாதங்களாக காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடத்தி வந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏக்களும் ம.ஜ.க கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களும் பதிவி விலகுவதாக அறிவித்ததையடுத்து அங்கு குமாரசாமியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதற்குப் பின்னணியில் ஆபரேஷன் கமலா என்ற பாஜகவின் முன்னெடுப்பு இருந்துள்ளதாக கூறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஜூலை 26ஆம் தேதி பாஜக-வைச் சேர்ந்த எடியூரப்பா கர்நாடகாவில் முதல்வராக பதவியேற்றார். கடந்த சில வருடங்களாக பாஜக வட கிழக்கின் மீது தனி கவனத்தை செலுத்தி வருகிறதைத் தொடர்ந்து, சிக்கிம் எம்.எல்.ஏ-க்களின் இந்த கட்சி மாற்றம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.


மேலும் படிக்க


கதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் பதவி?


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


டிவி கொடுக்கும் ஜியோ!


இரட்டைக் குழல் துப்பாக்கி!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து... வைகோ-அழகிரி காரசார மோதல்!


செவ்வாய், 13 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon