மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 4 ஜுன் 2020

எடப்பாடி எழுதிய கவிதை: அப்டேட் குமாரு

எடப்பாடி எழுதிய கவிதை: அப்டேட் குமாரு

பெரிய பெரிய மன்னர்கள் எல்லாம் ஆட்சித் திறமையோட கலையிலயும் இறங்கி தூர்வாங்கியிருக்காங்கன்னு எடப்பாடிக்கு யாரோ சொல்லிட்டாங்க. இம்சை அரசன் படத்துல கூட வில் வித்தையை வடிவேலு டிரை பண்ணிருப்பாருன்னு அவர்ட்ட எடுத்துச் சொல்லிருக்காங்க. அதைக் கேட்டுட்டுத்தான் கவிதை எழுதலாம்னு பிளான் பண்ணிருக்காரு. அப்படி உற்சாகமா களமாட கிளம்புன அவருக்கு மோசமான அட்டெம்ப்டா மாறிப்போச்சு “சிதம்‘பரம்’ பூமிக்கு பாரம்” மேட்டர். இதையும் அவரா சொன்னாரா இல்லை யாரையும் சம்பளத்துக்கு போட்டு எழுதச் சொன்னாரான்னு கேட்டதுக்கு எல்லாம் அந்த ஏழுமலையானுக்குத் தான் வெளிச்சம்னு சொல்லிட்டாரு அவங்க கட்சிக்காரர் ஒருத்தர் . இதுனால கவி மனசோட அவர் சொன்னதை யாரும் தப்பா எடுத்துக்காதீங்கன்னு இப்பத் தான் சொல்லிட்டு போறாரு. அப்டேட்டை பாருங்க, அடுத்து ஏதும் கவிதை வந்து விழுந்துருக்கான்னு பார்த்துட்டு வாரேன்.

கோழியின் கிறுக்கல்!!

ஒரு காலத்தில் அரசாங்கம் எது செய்தாலும் நம் நன்மைக்கே என்று நம்பவாவது செய்தோம்!

ஆனால் இப்பொழுதெல்லாம் ஏதாவது திட்டம் அறிவித்தால் முதலில் சந்தேகம் தான் வருகிறது!!

எனக்கொரு டவுட்டு

இந்தியாவிற்குள் நாங்கள் நுழைந்தால் என்ன செய்வீர்கள்-சீனா

வேறென்ன,ஆதார் கார்ட் இருக்கான்னு கேப்போம்..!

மெத்த வீட்டான்

அன்புமணி ராமதாஸிடம் இருக்கும் வாதிடும் திறமை, தமிழகத்தில் எந்த தலைவருக்கும் இல்லை - ராமதாஸ் #

ப்ரஸ்மீட்டில் கேள்வி கேட்ட நிருபர்களிடம் தண்ணிய குடிக்க சொன்னது எல்லாம் வாதிடும் திறமையில் வரும் போல !

ஜோக்கர்...

“திருப்பதி ஏழுமலையான் அருளால் மேட்டூர் அணை 100 அடியை எட்டியது!” ~ முதல்வர் பழனிசாமி

இந்த முக்கொம்பு அணை உடைஞ்சிருக்கே, அதுக்கு ஏன் அவர் அருள்பாலிக்கல??!

mohanram.ko

கெட்டுப் போக கூடாது என்பதற்காகவே 'ஆயில்' கைதியாக இருக்கிறது , ஊறுகாய்

பொம்மையா முருகன்

இந்தியாவிற்குள் நாங்கள் நுழைந்தால் என்ன செய்வீர்கள்-சீனா...

வந்துதான் பாரேன் முப்பத்தஞ்சி கிலோ மீட்டருக்கு ஒருக்கா வண்டிய நிறுத்தி கறாரா டோல் வசூல் பண்ணுவோம்...

ச ப் பா ணி

பேசிட்டு இருக்கும் போதே ஐ லவ் யூ சொல்வது போலத்தான் பழகின பத்தாவது நிமிசத்தில ஏதாவது ஒரு குரூப்பில நம்மை சேர்த்துக்கொள்வதும்

மெத்த வீட்டான்

முக்கொம்பு அணைக்கு காய்ச்சல் இன்னும் சரியாகலன்னு தண்ணீரை திருப்பி விட முயலாமல் இருந்தால் சரி !

செந்திலின்_கிறுக்கல்கள்

கவலைப்படாதிங்க எல்லாம் நான் பார்த்துக்கிறேன் என்பதில் மறைந்து இருக்கிறது ஆயிரம் பொய்கள்!

ஜோக்கர்...

சங்கீஸ் லாஜிக் ~

வாயில்லா ஜீவனை கொல்லாதீங்க,

ஆனா வாயில்லா ஜீவனுக்காக கொல்றது தப்பில்லை..!!!

mohanram.ko

கற்க கசடற,கற்று வேலைக்கு போய்

மேனேஜர் சொல்படி நிற்க அதற்கு தக

மாஸ்டர் பீஸ்

ஏழுமலையான் அருளால் மேட்டூர் அணை 100 அடியை எட்டியது.

-எடப்பாடி பழனிசாமி

அப்படியே அந்த தண்ணி கடலுக்கு போகாம தேக்கி வைக்கிறத்துக்கு எந்த சாமி அருள் வேணும்னு சொல்லிட்டீங்கனா வேண்டுதல ஆரம்பிச்சிடலாம்...

ஜோக்கர்...

பக்குவம் என்பது யாதெனில்,

ஒருவரின் எழுத்துக்கும் அவரின் குணத்திற்க்கும் சம்பந்தமில்லை என்று அறிதலே..!!!

மெத்த வீட்டான்

ப.சிதம்பரத்தால் தமிழகத்துக்கும் நாட்டுக்கும் என்ன கிடைத்தது? அவரால் பூமிக்குத்தான் பாரம் -எடப்பாடி பழனிசாமி #

அவர் உங்களை விட வெயிட் கம்மியாகத்தான் இருப்பாரு !

கோழியின் கிறுக்கல்!!

உங்களின் பேச்சால் ஆயிரம் பேரை சிரிக்க வைப்பதில் பெருமை இல்லை!

உங்களின் நினைவால் ஒருவரையாவது புன்னகைக்க வைப்பதே பெருமை!!

SKP KARUNA

நடிகர்னு சொன்னது விஜய் சேதுபதியையாம்! சூப்பர் ஸ்டாரை இல்லையாம்..

ஆக்சுவலா இது முந்தையதை விட கொடூர விளக்கமா இருக்கு. ரஜினி எப்பேர்பட்ட நடிகர்! கபாலியில் கூட கலக்கியிருப்பாரே! அவரையே நடிகர்னு ஒப்புக்கலைன்னா...

-லாக் ஆஃப்


மேலும் படிக்க


கதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் பதவி?


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


டிவி கொடுக்கும் ஜியோ!


இரட்டைக் குழல் துப்பாக்கி!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து... வைகோ-அழகிரி காரசார மோதல்!


செவ்வாய், 13 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon