மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 1 டிச 2020

அமைச்சர் வைத்த பரிட்சை: பெயில் ஆன முதல்வருக்கு மெமோ!

அமைச்சர் வைத்த பரிட்சை: பெயில் ஆன முதல்வருக்கு மெமோ!

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று (ஆகஸ்ட் 13) கலந்து கொண்ட சுகாதாரத் துறை அமைச்சர்,துறை ரீதியாகக் கேட்ட கேள்விகளுக்கு செவிலியர் கல்லூரி பொறுப்பு முதல்வர் பதில் அளிக்காததால் அவருக்கு உடனடியாக மெமோ வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நீமோக்காக்கல் எனப்படும் தடுப்பூசி போடும் நிகழ்ச்சி, உடல் தான விழிப்புணர்வு நிகழ்ச்சி, ரத்தநாள அறுவை சிகிச்சை பிரிவு துவக்க விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை முன்னிட்டு அமைச்சர் விஜயபாஸ்கர் அம்மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். விபத்துகளில் உயிரிழந்து உடலுறுப்புகளை தானம் செய்தவர்களின் குடும்பத்தினரை வரவழைத்துக் கவுரவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர், செவிலியர் பயிற்சி கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவர்களிடம் துறை ரீதியாக சில கேள்விகளை எழுப்பியுள்ளார், பிரசவ வார்டுகளில் நடந்துகொள்ள வேண்டிய விதம், பச்சிளம் குழந்தைகளைக் கையாள வேண்டிய விதம், அம்மா திட்டம் மூலம் விலையில்லா பொருட்கள் என்னென்ன வழங்கப்படுகின்றன உள்ளிட்ட கேள்விகளைக் கேட்டுள்ளார். இதற்குப் பயிற்சி செவிலியர்கள் சரியாகப் பதில் அளிக்கவில்லை. இதனைத்தொடர்ந்து செவிலியர் பயிற்சி கல்லூரி பொறுப்பு முதல்வர் தனலட்சுமியை அழைத்து அதே கேள்விகளை எழுப்பியிருக்கிறார். அதற்கு பொறுப்பு முதல்வர் தனலட்சுமியும் பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து பதில் அளிக்காதது குறித்து விளக்கம் கேட்டு, 17பி (மெமோ) அளிக்க உடனடியாக அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அவருடன் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, மாவட்ட ஆட்சியர் ராஜாமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


மேலும் படிக்க


கதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் பதவி?


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


டிவி கொடுக்கும் ஜியோ!


இரட்டைக் குழல் துப்பாக்கி!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து... வைகோ-அழகிரி காரசார மோதல்!


செவ்வாய், 13 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon