மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

தாயின் சடலம்: வறுமை செய்த கோலம்!

தாயின் சடலம்: வறுமை செய்த கோலம்!

தூத்துக்குடியில் தாயின் இறுதிச் சடங்கை செய்ய வசதியில்லாததால் மகனே சடலத்தை குப்பையில் வீசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தூத்துக்குடி தனசேகரன் நகரில் நேற்று வழக்கம் போல குப்பைகளை எடுக்கச் சென்ற நகராட்சி ஊழியர்கள் அங்கிருந்த சடலத்தைக் கண்டதால் அதிர்ச்சியடைந்துள்ளனர். தகவல் அறிந்ததும் உடனடியாக அவ்விடத்தை அடைந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அதன் பின் நடைபெற்ற விசாரணையில் பின்வரும் தகவல்கள் கிடைத்துள்ளன.

மதுரையைச் சேர்ந்த நாராயணசாமி - வசந்தி தம்பதியர் 25 ஆண்டுகளுக்கு முன் தூத்துக்குடியில் குடியேறினர். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். புரோகிதத்தை குடும்பத் தொழிலாக செய்து வந்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன், நாராயணசாமிக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே சென்னையிலுள்ள காப்பகம் ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன் பின் வசந்தி(58) தனது மகனுடன் தனசேகரன் நகரில் வசித்து வந்துள்ளார்.

சமீப மாதங்களாகத் தமது தாய் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், கடந்த ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில் உயிரிழந்த அவரது உடலுக்கு சடங்குகள் செய்து, அடக்கம் செய்வதற்கான வசதி இல்லாததால், திங்களன்று அதிகாலை, குளிப்பாட்டி, உடை மாற்றி போர்வையில் சுற்றி குப்பைகள் கொட்டப்படும் இடத்தில் வைத்துவிட்டதாகவும் அந்த இளைஞர் பிபிசி-க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

"நான் தான் இதைச் செய்தேனா என்று எனக்கே தோன்றுகிறது; இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது," என்று அவர் மேலும் கூறியுள்ளார். தனது பெயரை வெளியிட வேண்டாம் எனவும் அந்த 29 வயது இளைஞர் கூறியுள்ளார்.

மருத்துவமனையிலிருந்து பிரேத பரிசோதனைக்குப் பின், வசந்தியின் சகோதரர் ஒருவரிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டதாக தூத்துக்குடியில் உள்ள சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் ரேனியஸ் ஜேசுபாதம் தெரிவித்துள்ளார். தனசேகரன் நகரில் இருந்தவர்கள் உதவியுடன் உயிரிழந்த பெண்ணின் உடல் எரியூட்டப்பட்டது.

வறுமையின் காரணமாக தாயின் சடலத்தையே புதைக்க முடியாமல் போன மகனின் நிலை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


மேலும் படிக்க


கதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் பதவி?


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


டிவி கொடுக்கும் ஜியோ!


இரட்டைக் குழல் துப்பாக்கி!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து... வைகோ-அழகிரி காரசார மோதல்!


செவ்வாய், 13 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon