மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 4 ஜுன் 2020

சென்னையில் தங்கத்தின் விலை!

சென்னையில் தங்கத்தின் விலை!

சென்னையில் இன்று தங்கத்தின் விலை 29,000 ரூபாயைத் தாண்டியுள்ளது.

சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 25,000 ரூபாயைத் தாண்டியது. பின்னர் ஜூன் மாதத்தில் 26,000 ரூபாயையும், ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் 28,000 ரூபாயையும் தாண்டி தங்கம் விற்பனையானது.

இந்நிலையில் தற்போது தங்கத்தின் விலை 29,000 ரூபாயைத் தாண்டியுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 13) சவரன் ஒன்றுக்கு ரூ.29,016க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய தினத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.28,824 ஆக மட்டுமே இருந்தது. அதாவது ஒரே நாளில் தங்கம் விலை 192 ரூபாய் உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.3,627க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை ரூ.3,603 ஆக இருந்தது.

24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,760லிருந்து இன்று ரூ.3,784 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, 8 கிராம் தூய தங்கத்தின் விலை ரூ.30,080லிருந்து ரூ.30,272 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளியின் விலையைப் பொறுத்தவரையில், ஒரு கிராம் வெள்ளி இன்று 49 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.49,000 ஆக இருக்கிறது.

சர்வதேசச் சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதால் இந்தியாவில் தங்கத்தின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய சூழலைப் பார்க்கும்போது தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் என்று விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க


கதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் பதவி?


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


டிவி கொடுக்கும் ஜியோ!


இரட்டைக் குழல் துப்பாக்கி!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து... வைகோ-அழகிரி காரசார மோதல்!


செவ்வாய், 13 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon