மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

செட்டிநாடு ஸ்பெஷல்: காய்கறி பிரட்டல்

செட்டிநாடு ஸ்பெஷல்: காய்கறி பிரட்டல்

சுவையும் மணமும் மிகுந்த செட்டிநாடு உணவுகளில் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் உண்டு. அதோடு, உணவு வகைகளின் பெயர்களுக்கும் ஒரு பின்னணி உண்டு. காய்கறிகள் மற்றும் பருப்பைத் தனித்தனியாக வேகவைத்து எடுத்து, பிறகு தாளித்து இரண்டையும் சேர்த்து லேசாகத் துவட்டி (கலந்து) எடுப்பதாலே அது துவட்டல். மசாலாவை நன்கு வதக்கியபிறகு காய்கறிகள் அல்லது வேகவைத்த கடலை வகைகளைச்சேர்த்து, நன்கு சுருண்டு வரும்வரை புரட்டி எடுப்பதால்தான், அதற்குப் பிரட்டல் என்று பெயர்.

என்ன தேவை?

பெரிய கேரட், உருளைக்கிழங்கு – தலா ஒன்று (தோல் நீக்கி சிறிய கட்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்)

பட்டாணி, நறுக்கிய பீன்ஸ் – அரை கப் , சிறிய துண்டுகளாக நறுக்கிய காலிஃப்ளவர் – அரை கப்

வெங்காயம் – ஒன்று

பூண்டு – 10 பல்

தக்காளி – ஒன்று (விழுதாக அரைத்துக் கொள்ளவும்)

மிளகாய்த்தூள் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.

அரைக்க:

தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்

சீரகம், சோம்பு – தலா அரை டீஸ்பூன்

தாளிக்க:

கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்

பெருங்காயம் – கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

எப்படிச் செய்வது?

காலிஃப்ளவரை உப்பு தண்ணீரில் ஒரு கொதிவிட்டு இறக்கி வடிகட்டிவைத்துக் கொள்ளவும். கேரட், உருளைக்கிழங்கு, நறுக்கிய பீன்ஸ், பட்டாணியை குக்கரில் சேர்த்து, காய்கறி மூழ்கும் வரை தண்ணீர்விட்டு, உப்பு சேர்த்து ஒரு விசில்விட்டு இறக்கி வடிகட்டி வைத்துக் கொள்ளவும். பூண்டு, வெங்காயம் தோல் நீக்கி, சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சிறிது தண்ணீர்விட்டு நன்கு நைஸாக அரைத்துவைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு, தாளிப்புப் பொருள்களைத் தாளித்து பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். ஓரிரு நிமிடங்கள் கழித்து, தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். சற்று வதங்கியதும் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பிறகு வேகவைத்த காய்கறிகள், அரைத்த விழுது சேர்த்து நன்கு கிளறி விடவும். நன்றாகச் சுருளக் கிளறி இறக்கவும்.

என்ன பலன்?

தற்போதைய காலகட்டத்தில் மனிதர்களுக்குப் பெரும் பாதி்ப்பை ஏற்படுத்கக் கூடிய புற்றுநோய் மற்றும் மாரடைப்பு ஆகியவற்றை சரியான பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதன் மூலம் தடுக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ள நிலையில் இதுபோன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

நேற்றைய ரெசிப்பி: பக்ரீத் ஸ்பெஷல்: செட்டிநாடு மட்டன் பிரியாணி


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து... வைகோ-அழகிரி காரசார மோதல்!


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


துரைமுருகன் சொந்த ஊர் ரிசல்ட்!


மணிகண்டன் - உடுமலை ராதாகிருஷ்ணன் - வேலுமணி: எடப்பாடியின் கில்லாடி அரசியல்!


அத்திவரதர் மோதல் :பொன்னையா கலெக்ட்டரான பின்னணி!


செவ்வாய், 13 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon