மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 4 ஜுன் 2020

அத்திவரதரை காண மேலும் 48 நாட்கள் : முறையீடு!

அத்திவரதரை காண மேலும் 48 நாட்கள் : முறையீடு!

காஞ்சிபுரம், ஸ்ரீ அத்திவரதர் வைபவத்தின் 44ஆம் நாளான இன்று இளம் பச்சை மற்றும் இளம் ஆரஞ்சு நிற பட்டாடை உடுத்தி தோளில் மற்றும் கைகளில் 8 கிளி வைத்தபடி ராஜ மகுடம் அணிந்தவாறு பக்தர்களுக்கு அத்திவரதர் காட்சி அளித்து வருகிறார். இந்நிலையில் அத்திவரதர் வைபவத்தை 48 நாட்கள் நீட்டிக்க வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 13) முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 1ஆம் தேதி தொடங்கிய அத்திவரதர் வைபவம் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இன்னும் 4 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் காஞ்சியில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. 43ஆம் நாளான நேற்று ஒரே நாளில் மட்டும் 4 லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளனர். இந்த எண்ணிக்கை அடுத்து வரும் தினங்களில் 5 லட்சமாக அதிகரிக்கும் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் காவல்துறை , மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத் துறை ஆகியவை, எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க விரிவான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்கச் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரபாகரன் என்பவர் முறையீடு செய்துள்ளார்.

வைபவம் முடியக் குறைந்த நாட்களே உள்ள நிலையில், லட்சக்கணக்கான மக்கள் தரிசனத்துக்கு வருவார்கள் என்பதால் உற்சவ காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதனை விசாரித்த நீதிமன்றம் மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று பிரபாகரனுக்கு அறிவுறுத்தியுள்ளது.


மேலும் படிக்க


டிவி கொடுக்கும் ஜியோ!


கதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் பதவி?


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


இரட்டைக் குழல் துப்பாக்கி!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து... வைகோ-அழகிரி காரசார மோதல்!


செவ்வாய், 13 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon