மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 29 நவ 2020

ஜனநாதனின் ‘லாபம்’: கைகோர்த்த தன்ஷிகா

ஜனநாதனின் ‘லாபம்’: கைகோர்த்த தன்ஷிகா

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் நடித்து வரும் படத்தில் தன்ஷிகா நாயகியாக இணைந்துள்ளார்.

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி புறம்போக்கு படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தைத் தொடர்ந்து இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் லாபம். ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 22ஆம் தேதி தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

கிராமப்புற பின்னணியில் வலுவான அரசியல் கதையம்சத்துடன் உருவாகும் இந்தப் படத்தில் கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜகபதி பாபு வில்லனாக நடிக்கிறார்.

இந்நிலையில், தன்ஷிகா இப்படத்தில் இணைந்துள்ளார். ஜகபதி பாபுவுடன் இவர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றது. இவர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் வெளியான பேராண்மை படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டி.இமான் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். 7சிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து விஜய் சேதுபதி இந்தப் படத்தை தயாரிக்கிறார்.


மேலும் படிக்க


டிவி கொடுக்கும் ஜியோ!


கதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் பதவி?


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


இரட்டைக் குழல் துப்பாக்கி!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து... வைகோ-அழகிரி காரசார மோதல்!


செவ்வாய், 13 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon