மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 1 டிச 2020

மூவர் தற்கொலைக்கு அப்பாதான் காரணம்: ஆடியோ ஆதாரம்!

மூவர் தற்கொலைக்கு அப்பாதான் காரணம்: ஆடியோ ஆதாரம்!

தங்களது தற்கொலைக்கு அப்பாதான் காரணம் என்று வாட்ஸ் அப்பில் ஆடியோ அனுப்பிவிட்டு மாணவி ஒருவர் தனது தாய் மற்றும் தங்கையுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தந்தையின் தவறான செயல்பாடுகளால் பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பது பெங்களூருவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்தவர் சித்தய்யா (48). பெங்களூருவில் லைன் மேனாக இருந்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (43). இவர்களுக்கு மானசா (17), பூமிகா (15) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். மானசா பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். பூமிகா பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மானசா தனது மாமா புட்டசாமிக்கு ஆடியோ ஒன்றை அனுப்பிவிட்டு, தனது தாய் மற்றும் தங்கையுடன் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அந்த வாட்ஸ் அப் ஆடியோவில், ஒவ்வொருவருக்கும் நல்ல அப்பா கிடைக்க வேண்டும். ஆனால் எங்கள் அப்பா எங்களது குடும்பத்தை சீரழித்துவிட்டார். எங்கள் தற்கொலைக்கு அப்பாதான் காரணம்” என்று உருக்கமாகப் பேசியுள்ளார்.

அந்த வாட்ஸ் ஆடியோவை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த புட்டசாமி அவசர அவசரமாக ராஜேஸ்வரி வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டியுள்ளார். ஆனால் கதவு உள் தாழிட்டு இருந்துள்ளது. கதவை உடைத்துவிட்டு உள்ளே சென்று பார்த்ததில் மூவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. தனது சகோதரி மற்றும் இரு பிள்ளைகள் உயிரிழந்ததை கண்டு கதறி அழுத புட்டசாமி இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலைக்கு அப்பாதான் காரணம் என மானசா கூறியது குறித்து விசாரித்ததில், அவரது தந்தையான சித்தய்யா வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாகத் தனது குடும்பத்தைக் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். மானாசாவும் அவரது அம்மாவும் தொடர்ந்து சித்தய்யாவுடன் சமாதானம் பேசியுள்ளனர். எனினும் அவர் தனது குடும்பத்தைப் புறக்கணித்து வந்துள்ளார். இரு தினங்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் சண்டை போட்டுவிட்டு தமிழகம் சென்றுவிட்டார் சித்தய்யா. இதைத்தொடர்ந்தே மூவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதுகுறித்து ஹனுமந்த்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சித்தய்யாவை கைது செய்ய அவரை தேடி வருகின்றனர்.

இவ்வழக்கு அனைத்து கோணங்களிலிருந்தும் விசாரிக்கப்படும் என்று பெங்களூரு தெற்கு டிசிபி ரோஹினி கட்டோச் செபாட் தெரிவித்துள்ளார்,


மேலும் படிக்க


டிவி கொடுக்கும் ஜியோ!


கதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் பதவி?


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


இரட்டைக் குழல் துப்பாக்கி!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து... வைகோ-அழகிரி காரசார மோதல்!


செவ்வாய், 13 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon