மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 14 நவ 2019

ரஜினிக்கு மகாபாரதப் பாடம்!

ரஜினிக்கு மகாபாரதப் பாடம்!

“அன்புள்ள ரஜினிகாந்த் அவர்களே, தயவுசெய்து மகாபாரதத்தை திரும்பவும் படியுங்கள்” என கே.எஸ். அழகிரி ரஜினிகாந்தின் மோடி-அமித் ஷா புகழுக்கு மறுமொழி கூறியுள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் `கவனித்தல் கற்றல் வழிநடத்துதல்' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமையன்று(ஆக. 11) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரஜினிகாந்த், காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்புத் தகுதி அளிக்கும் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது குறித்து அமித்ஷாவை பாராட்டியுள்ளார். மேலும், மோடி-அமித் ஷா ஆகிய இருவரையும் குறிப்பிட்டு “மோடியும் அமித் ஷாவும் அர்ஜுனன் கிருஷ்ணன் போன்றவர்கள்” என பேசியது பரபரப்பாகி வருகிறது. இதனால் சமூக வலைதளங்களில் ரஜினிகாந்த் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். திருமாவளவன், கனிமொழி ஆகியோர் ரஜினியின் பேச்சுக்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ரஜினிகாந்தின் பேச்சை முன்வைத்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி நீண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “மோடியையும், அமித் ஷாவையும், கிருஷ்ணர் என்றும், அர்ஜுனர் என்றும் ரஜினி சொல்கிறார். ஆனால், இதில் யார் கிருஷ்ணர், யார் அர்ஜுனர் என்று தனக்குத் தெரியவில்லை என்றும் கூறுகிறார். நல்லவேளை ரஜினிக்கு உள்ளுணர்வு இங்கு வேலை செய்திருக்கிறது. ஏனென்றால், மோடியும், அமித் ஷாவும் துரியோதனனும், சகுனியுமே ஆவார்கள், இவர்கள் கிருஷ்ணரும், அர்ஜுனரும் அல்ல. பலகோடி மக்களின் உரிமைகளைப் பறித்தவர்கள் எப்படி கிருஷ்ணரும், அர்ஜுனருமாக இருக்க முடியும். அன்புள்ள ரஜினிகாந்த் அவர்களே, தயவுசெய்து மகாபாரதத்தை திரும்பவும் படியுங்கள். திரும்பவும் சரியாகப் படியுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த், கே.எஸ். அழகிரி ஆகிய இருவரும் மகாபாரத இதிகாசத்தை முன்வைத்து தங்கள் பார்வையில் மோடி-அமித் ஷா ஆகிய இருவரையும் ஒப்பிட்டுள்ளது அரசியல் களத்தில் விவாதிக்கப்படும் கருத்தாக மாறிவருகிறது.


மேலும் படிக்க


டிவி கொடுக்கும் ஜியோ!


கதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் பதவி?


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


இரட்டைக் குழல் துப்பாக்கி!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து... வைகோ-அழகிரி காரசார மோதல்!


செவ்வாய், 13 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon