மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 4 ஜுன் 2020

ஹாங்காங்கில் தீவிரமாகும் பதற்றம்!

ஹாங்காங்கில் தீவிரமாகும் பதற்றம்!

ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்கும் சர்சைக்குரிய மசோதாவை எதிர்த்து பத்து வாரமாக ஜனநாயக ஆதரவுக்குழுவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஹாங்காங் - சீனா இடையேயான ஒப்படைப்பு சட்ட மசோதாவுக்கு (Anti- Extradition Bill) எதிராக ஹாங்காங்கில் கடந்த மார்ச் 31ஆம் தேதியிலிருந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஹாங்காங் இன்னொரு காஷ்மீர்?

பிரிட்டிஷ் காலனியாக இருந்த ஹாங்காங் நகரத்தை 1997ஆம் ஆண்டு சீன அரசிடம் ஒப்படைத்தது பிரிட்டிஷ் அரசாங்கம். "ஒரே நாடு, இரண்டு அமைப்புகள்" என்ற கொள்கையின் மூலம், சீனப் பெருநிலப்பகுதியிலுள்ள மக்களை விட ஹாங்காங் மக்களுக்கு வேறுபட்ட உரிமைகள் மற்றும் சட்டங்கள் தொடர வேண்டும் என்று ஒப்பந்தமானது. அது முதல் அரை தன்னாட்சி ஆட்சி முறை ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது. ஹாங்காங் ராணுவம், வெளியுறவு போன்ற முக்கியமான சில துறைகளில் தலையிடும் உரிமையை சீனா பெற்றிருந்தது.

இதனால், தனி நாடு கோரி போராட்டங்கள் வெடிக்க, 2017-ம் ஆண்டு ஹாங்காங்குக்கு எனத் தனித்தேர்தல் நடத்தப்பட்டு, ஹாங்காங் முழுமையான தனி நாடாக அறிவிக்கப்படும் என்று சீனா அறிவித்தது. ஆனால், தேர்தல் தேதிக்கு முன்னதாகவே, சீன அரசு கைகாட்டும் நபர்கள் மட்டுமே ஹாங்காங் தேர்தலில் போட்டியிட முடியும் என்கிற சட்டத்தை 2014-ம் ஆண்டு சீனா ஹாங்காங் மீது புகுத்தியது. இது சுதந்திரத்தை எதிர்பார்த்து காத்திருந்த ஹாங்காங் மக்களின் கோபத்துக்கு பிரதான காரணமாகியது.

இந்நிலையில்தான் ஹாங்காங் - சீனா இடையேயான ஒப்படைப்பு சட்ட மசோதா ஒப்புதல் ஆனது. ஜூலை 1ஆம் தேதி ஹாங்காங் விடுதலை தினத்தையொட்டி பேரணிகள் நடத்தப்படுவது வழக்கம். அப்படித் தொடங்கிய பேரணி தற்போது 4,30,000 மக்களுடன் போராட்டமாக வெடித்துள்ளது.

போராட்டக்காரர்களின் ஐந்து கோரிக்கைகள்

ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்கும் சர்ச்சைக்குரிய மசோதா ’செயலிழந்துவிட்டது’ என ஹாங்காங்கின் நிர்வாகத் தலைவர் கேரி லேம் ஜூலை 9ஆம் தேதி அறிவித்தார். ஆனால், அவை முழுவதுமாக நீக்கப்பட்டது என அவர் அறிவிக்காததால் மக்கள் போராட்டத்தை கைவிட மறுக்கின்றனர்.

போரட்டக்காரர்கள் முன்வைக்கும் ஐந்து கோரிக்கைகள் :

1. முன்மொழியப்பட்ட ஒப்படைப்பு மசோதாவை முழுமையாக திரும்பப் பெறுதல்.

2. ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக "கலகம்" என்ற வார்த்தையின் பயன்பாட்டை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும்.

3.கைது செய்யப்பட்ட எதிர்ப்பாளர்கள் நிபந்தனையற்ற முறையில் விடுதலை செய்யப்பட வேண்டும். மேலும், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் கைவிடப்பட வேண்டும்.

4. காவல்துறையின் நடத்தை மீது ஒரு சுயாதீன விசாரணை.

5. உண்மையான உலகளாவிய வாக்குரிமையை செயல்படுத்துதல்.

போராட்டத்தின் தற்போதைய நிலவரம்

கடந்த ஞாயிற்றுக் கிழமை(ஆக.11) அன்று போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டை வீசியது காவல்துறை. இதனால் ஆத்திரமடைந்த போராட்டககாரர்கள் எதிர் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், ‘ஹாங்காங் பாதுகாப்பானதாக இல்லை!’ ‘ஹாங்காங் காவல்துறை வெட்கப்பட வேண்டும்’ என்பது போன்ற பதாகைகளுடன் மக்கள் நேற்று(ஆக 12) ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

விமான நிலைய உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தியதையடுத்து விமானப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு விமானங்கள் புறப்படுவதும் தரையிறங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில் 5 ஆயிரம் பேருக்கு மேல் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். போராட்டக்காரர்களின் முற்றுகையால் சாலைப் போக்குவரத்தும் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.

தற்போது, ஹாங்காங்கிலிருந்து விமானப் பயணம் மேற்கொள்ள விரும்பும் யாரும் விமான நிலையம் வர வேண்டாம் என்றும் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும் படிக்க


டிவி கொடுக்கும் ஜியோ!


கதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் பதவி?


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


இரட்டைக் குழல் துப்பாக்கி!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து... வைகோ-அழகிரி காரசார மோதல்!


செவ்வாய், 13 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon