மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

கார் விற்பனை வீழ்ச்சி: வாகனத் துறைக்கு மேலும் நெருக்கடி!

கார் விற்பனை வீழ்ச்சி: வாகனத் துறைக்கு மேலும் நெருக்கடி!

தொடர்ந்து ஒன்பதாவது மாதமாக இந்தியாவில் பயணிகள் வாகன விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஜூலை மாதத்துக்கான உள்நாட்டு வாகன விற்பனை குறித்த விவரங்களை இந்திய ஆட்டோமொபைல் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜூலை மாதத்தில் மொத்தம் 1,22,956 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2018ஆம் ஆண்டின் ஜூலை மாதம் விற்பனை செய்யப்பட்ட 1,91,979 கார்களை விட 35.95 சதவிகிதம் குறைவாகும். மோட்டார் சைக்கிள் விற்பனையிலும் 18.88 சதவிகிதம் சரிவு ஏற்பட்டுள்ளது. 2018 ஜூலையில் 11,51,324 மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் இந்த எண்ணிக்கை 9,33,996 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த இருசக்கர வாகன விற்பனையில் 16.82 சதவிகித சரிவு ஏற்பட்டுள்ளது.

வர்த்தக வாகன விற்பனையைப் பொறுத்தவரையில், 2018 ஜூலையில் 76,545 ஆக இருந்த விற்பனை எண்ணிக்கை இந்த ஜூலையில் 56,866 ஆகக் குறைந்துள்ளது. அனைத்து வாகனப் பிரிவிலும் சேர்த்து மொத்தம் 18,25,148 வாகனங்கள் மட்டுமே ஜூலை மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2018 ஜூலையில் 22,45,223 வாகனங்கள் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டிருந்தது. இது 18.71 சதவிகித வீழ்ச்சியாகும்.

வாகன உற்பத்திக்கான செலவுகள் அதிகரிப்பு, உதிரிப்பாகங்கள் இறக்குமதிக்கான வரி உயர்வு, அதிக ஜிஎஸ்டி போன்ற பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வரும் வாகனத் துறை, விற்பனையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. உற்பத்திச் செலவை ஈடுகட்ட வாகனங்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் வாகன விற்பனை குறைந்துள்ளது. மேலும், எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டுக்கு மக்களை அரசு ஊக்குவித்து வருவதால் பெட்ரோல் - டீசல் வாகனங்களை வாங்க மக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

வாகனத் துறையில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான சூழலால் பலர் தங்களது வேலைவாய்ப்புகளையும் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உயரும் செலவுகள்: குறையும் உற்பத்தி!

3.50 லட்சம் பேர் வேலையிழப்பு!

வாகனத் துறையில் தொடரும் பணியிழப்புகள்!


மேலும் படிக்க


டிவி கொடுக்கும் ஜியோ!


கதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் பதவி?


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


இரட்டைக் குழல் துப்பாக்கி!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து... வைகோ-அழகிரி காரசார மோதல்!


செவ்வாய், 13 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon