மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

அஜித்துக்கு குவியும் பாராட்டு!

அஜித்துக்கு குவியும் பாராட்டு!

நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்த ரஜினிகாந்த், தொலைபேசி வாயிலாக அஜித்தை பாராட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆகஸ்ட் 8ஆம் தேதி அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வெளியாகியுள்ளது. போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் வெளியான இப்படம் வரவேற்பையும் கடந்து ஆக்கபூர்வமான விவாதங்களை உருவாக்கியிருக்கிறது. இப்படத்தில் அஜித் பேசும் ‘நோ மீன்ஸ் நோ’ சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக்கிட்டு ட்ரெண்டிங்காகி வருகிறது. இப்படத்தை பார்த்த சூர்யா-ஜோதிகா அஜித்துக்கு பூங்கொத்து அனுப்பியிருந்தது சில நாட்களுக்கு முன் வைரலானது. தொடர்ந்து அஜித்துக்கு பாராட்டு குவிந்து வருகின்றன.

ஆகஸ்ட் 11ஆம் தேதி, பெண்கள் பாதுகாப்பிற்காக தமிழக காவல்துறை KAVALAN SOS என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இச்செயலியை அறிமுகப்படுத்தும் போது, திருநெல்வேலி காவல்துறை துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் ‘அஜித்தின் நேர்கொண்ட பார்வை இக்காலத்தின் தேவை’ எனக் கூறியுள்ளார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்தை நேற்று(ஆக. 12) பார்த்த ரஜினிகாந்த் அஜித்தை தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார். ‘இப்படியொரு படத்தை தேர்வு செய்து நடித்ததற்கு ஹேட்ஸ் ஆஃப் அஜித்’ எனக் கூறியுள்ளார் ரஜினி. ரஜினிகாந்தின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் இவ்வருட தொடக்கத்தில் பொங்கலை முன்னிட்டு வெளியாகின. அதனால் ரஜினிகாந்துடன் அஜித் போட்டியிடுகின்றார் என பரவலாகப் பேசப்பட்ட சூழ்நிலையில், ரஜினிகாந்தின் இந்தப் பாராட்டு அச்சூழலை இணக்கமாக்கி வருகிறது.


மேலும் படிக்க


டிவி கொடுக்கும் ஜியோ!


கதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் பதவி?


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


இரட்டைக் குழல் துப்பாக்கி!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து... வைகோ-அழகிரி காரசார மோதல்!


செவ்வாய், 13 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon