மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 22 ஜன 2021

டிவி கொடுக்கும் ஜியோ!

டிவி கொடுக்கும் ஜியோ!வெற்றிநடை போடும் தமிழகம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் அதன் வருடாந்திரப் பொதுக்கூட்டத்தில் தனது ஃபைபர்-டு-ஹோம் (எஃப்டிடிஎச்) புதிய சேவையை அறிமுகம் செய்து தனது திட்டங்கள் குறித்த விவரங்களைத் தந்துள்ளது.

வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆரம்பமாகவிருக்கும் ஜியோ ஃபைபர் சேவைகள் மூலமாக 100Mbps வேகம்கொண்ட இணைய சேவையை 700 ரூபாய்க்குத் தரவிருப்பதாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

ஜியோவின் அதிகபட்ச டாப்-அப்புக்கு மாதாந்திரம் சுமார் 700 முதல் 10,000 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகுப்பு 1Gbps வேகத்தை வழங்கும். அனைத்து இந்திய ஆபரேட்டர்களுக்குக் குரல் அழைப்புகள் இலவசமாகவும், கனடா மற்றும் இங்கிலாந்து வாடிக்கையாளர்களுக்கு மாதம் 500 ரூபாய்க்கும் வழங்கப்படவுள்ளது.

இத்துடன் ஜியோ ஃபாரெவர் திட்டங்களையும் அம்பானி அறிமுகப்படுத்தினார், இதன் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு எச்டி அல்லது 4-கே எல்இடி டிவி மற்றும் 4-கே செட்-டாப் பாக்ஸை இலவசமாக வழங்கவுள்ளார். ஜியோ ஃபைபரின் சந்தாதாரர்களுக்கு ஒரு செட்-டாப் பாக்ஸ் வழங்கப்படும். இது சில புதிய ஸ்மார்ட் அம்சங்களைக் கொண்டதாக இருக்கும். உதாரணமாக, கான்ஃபரன்ஸ் வீடியோ கால்களை இதன் மூலம் செய்து பயன் பெறலாம்.

ஜியோ ஃபைபர் வரவேற்பு சலுகை மூலமாக இந்த அதிரடி ஆஃபரை வழங்கவுள்ளனர். இது தொடர்பான முழு கட்டண விவரங்கள் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கூறுகையில், “ஜியோ ஒவ்வொரு மாதமும் 10 மில்லியன் புதிய வாடிக்கையாளர்களைப் பெறுகிறது. நாங்கள் எங்களின் 5ஜி சேவையைத் தர தயாராகிவிட்டோம். இந்தத் திட்டம் அறிமுகமான பின்னர் 4ஜி+ சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்கள் இணைப்பை 5ஜி ஆக மேம்படுத்திக்கொள்ளலாம்.

முதல் முயற்சியாக 5 லட்சம் வீடுகளில் சோதனை செய்யப்படவுள்ளது. மொத்தமாக 1,600 நகரங்களில் வசிக்கும் 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இச்சேவை மூலம் பயன்பெறுவர். அமெரிக்காவின் சராசரி இணைய வேகம் 90Mbps. ஆனால், இந்தத் திட்டம் மூலமாக அதைவிட வேகமான இணைய சேவையைத் தரவிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து... வைகோ-அழகிரி காரசார மோதல்!


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


துரைமுருகன் சொந்த ஊர் ரிசல்ட்!


மணிகண்டன் - உடுமலை ராதாகிருஷ்ணன் - வேலுமணி: எடப்பாடியின் கில்லாடி அரசியல்!


அத்திவரதர் மோதல் :பொன்னையா கலெக்ட்டரான பின்னணி!


செவ்வாய், 13 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon