மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 24 பிப் 2020

அமமுகவில் இன்னும் பல தினகரன்கள்!

அமமுகவில் இன்னும் பல தினகரன்கள்!

திராவிட கட்சிகளுக்கு பலமே மேடைப்பேச்சுதான், பெரியார், அண்ணா, கலைஞர் பேச்சு கேட்க கட்சி பாகுபாடுகள் இல்லாமல் ஓடோடிவந்து பங்கேற்பார்கள்.

ஆனால் இப்போது திமுக, அதிமுகவில் பேச்சாளர்களின் நிலை கவலைக்குரியதாக இருக்கும் நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு என்று புதிய பேச்சாளர்களை உருவாக்க டிடிவி தினகரன் தனிக் கவனம் எடுத்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இதன்படி அமமுக கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதிக்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக்கொடுத்து தமிழகம் முழுவதும் பேச்சாளர்களைத் தேடித் தேர்வு செய்து பயிற்சிகள் கொடுத்து கழகத்துக்கு பலம்சேர்க்கச் சொல்லியுள்ளார் தினகரன்.அதன்படி ஆகஸ்டு 10 ஆம் தேதி தஞ்சையிலும் ஆகஸ்ட் 11ஆம் தேதி திருச்சியிலும் பேச்சாளர்கள் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடுகள் செய்திருந்தார் கட்சி மாவட்டச் செயலாளர் சீனிவாசன்.

பேச்சாளர்கள் தேர்வில் ஆறு மாவட்டத்திலிருந்து 15 பெண்கள் உட்பட 150 பேர் பங்கேற்றார்கள், அவர்களுடன் கட்சியினரும் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள். காலை 10.30 மணிக்குத் துவங்கிய கூட்டம் மாலை 3.30 மணி வரையில் நான் ஸ்டாப்பாக நடைபெற்றது, ஒவ்வொருவருக்கும் ஒரு நிமிடம் முதல் ஒன்றரை நிமிடங்கள் வரை நேரம் ஒதுக்கப்பட்டது.

கடைசியாகப் பேசிய கொள்கைப் பரப்பு செயலாளர் சரஸ்வதி, "திராவிட கட்சிகளுக்குப் பலமே மேடைப்பேச்சுதான், திராவிடக் கொள்கைகளைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். தந்தை பெரியார், அண்ணா மேடைப் பேச்சுகளைத் தேடிக் கேளுங்கள். திராவிட கொள்கையை மக்களிடம் கொண்டுசெல்லவேண்டும். பலரும் திராவிட கொள்கையை மறந்துவிட்டார்கள், இப்போது அமமுகதான் மக்களிடம் கொண்டுசெல்லவேண்டும்” என்றவர்,

”நமது பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்ஆலோசனைகள்படி மேடையில் பேசும்போது கவனமாகவும் கண்ணியமாகவும் பேசவேண்டும்.எதிர்க்கட்சியினரை வாடா, போடா என்று பேசக்கூடாது, கருத்துகள் வாதம் மட்டுமே செய்யவேண்டும். மொத்தத்தில் நமது பொதுச் செயலாளர் தினகரன் பாணியையே பின்பற்றுங்கள். யாரையும் புண்படுத்தாமல் இயல்பாக மக்களின் மொழியில், எதற்காகவும் உணர்ச்சிவசப்படாமல் தெளிவாக நிதானமாக பேச வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

“அமமுக கட்சி மேடைகளில் நான் மட்டுமே பேசிக் கொண்டிருப்பதாக ஒரு தோற்றம் உள்ளது. அமமுகவை பலப்படுத்த என்னைப் போலவே பல தினகரன்கள் பேச வேண்டும். அதற்காகத்தான் இந்த பட்டறை. எனவே பல தினகரன்களை உருவாக்க வேண்டும்” என்று தினகரனே உத்தரவிட்டதன் பேரில்தான் மாநிலம் முழுதும் தினகரன்களை கண்டறியும் பேச்சாளர் பட்டறைகளை நடத்தி வருகிறது அமமுக.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து... வைகோ-அழகிரி காரசார மோதல்!


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


துரைமுருகன் சொந்த ஊர் ரிசல்ட்!


மணிகண்டன் - உடுமலை ராதாகிருஷ்ணன் - வேலுமணி: எடப்பாடியின் கில்லாடி அரசியல்!


அத்திவரதர் மோதல் :பொன்னையா கலெக்ட்டரான பின்னணி!


செவ்வாய், 13 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon