மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 4 ஜுன் 2020

அஜித் வழியில் சூர்யா

அஜித் வழியில் சூர்யா

சூர்யா நடிக்கும் அடுத்தப் படத்தை இயக்குவது ஹரியா, சிவாவா என்ற போட்டியில் சிவா முந்தியுள்ளார்.

ஆண்டின் தொடக்கத்திலேயே விஸ்வாசம் படத்தின் மூலம் ஹிட் கொடுத்தவர் சிவா. அஜித் நடிப்பில் தொடர்ந்து படங்களை இயக்கிவந்த சிவாவுக்கு விஸ்வாசம் படம் மற்ற படங்களைவிட அதிக பாராட்டுகளைப் பெற்றுத் தந்ததுடன் அவர்மீது இருந்த விமர்சனங்களுக்கும் பதிலாக அமைந்தது.

ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்துக்குப் போட்டியாக அதே நாளில் வெளியாகி அதைவிட அதிக வசூலை ஈட்டியது முக்கியமாகப் பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பதாகச் செய்திகள் வெளியாகின. சிவா - ரஜினி சந்திப்பு நடந்தது இதை உறுதிப்படுத்தியது. தர்பார் படத்தை முடித்தவுடன் சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்குள் சிவா, சூர்யாவைக் கதாநாயகனாகக் கொண்டு புதிய படத்தை இயக்கவுள்ளார்.

சூர்யா நடித்துள்ள காப்பான் திரைப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அவர் தற்போது சூரரைப் போற்று படத்தில் கவனம் செலுத்திவருகிறார்.

இந்த நிலையில் சூர்யா நடிக்கும் 39ஆவது படம் பற்றிய அறிவிப்பை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது. சிவா இயக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். திலீப் சுப்பராயன் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார். ரூபன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். கலை இயக்குநராக மிலன் இணைந்துள்ளார். படத்தில் நடிக்கும் நாயகி, மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்களைப் படக்குழு இன்னும் வெளியிடவில்லை.

கடந்த சில ஆண்டுகளாக சூர்யாவுக்கு ஹிட் படங்கள் அமையவில்லை. தொடர்ந்து அவரது படங்கள் ரசிகர்களை ஈர்க்கத் தவறிவரும் நிலையில் உடனடியாக ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்த நிலையில் இரு படங்கள் ஏற்கெனவே தயாராகிவந்தாலும் சிவா மூலம் ஒரு கமர்ஷியல் ஹிட் கொடுக்க இறங்கியுள்ளார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யா, ஹரி இயக்கத்தில் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து... வைகோ-அழகிரி காரசார மோதல்!


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


துரைமுருகன் சொந்த ஊர் ரிசல்ட்!


மணிகண்டன் - உடுமலை ராதாகிருஷ்ணன் - வேலுமணி: எடப்பாடியின் கில்லாடி அரசியல்!


அத்திவரதர் மோதல் :பொன்னையா கலெக்ட்டரான பின்னணி!


செவ்வாய், 13 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon